ஃபாரினில் கணவர்.. தீராத உடலுறவு மோகம்.. வாய்க்குள் வெடித்த அந்த குச்சி.. கள்ளக் காதலன் பகீர் வாக்குமூலம்..

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷின் மனைவி தர்ஷிதா (22) கர்நாடகாவின் சாலிகிராமத்தில் உள்ள லாட்ஜ் அறையில் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

தர்ஷிதா, கணவர் வீட்டில் இருந்து 30 சவரன் நகையும், 4 லட்சம் ரூபாயும் திருடி, தனது கள்ளக்காதலனான சித்தராஜுவுடன் இணைந்து வாழ்க்கையில் செட்டில் ஆக திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தத் திட்டம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர் மாவட்டம், இரிக்கூரில் உள்ள சுபாஷின் வீட்டில் நகையும் பணமும் மாயமானது தொடர்பாக இரிட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, சுபாஷின் குடும்பத்தினர் மீது சந்தேகம் திரும்பியது.

மேலும், தர்ஷிதாவின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ததில், அவர் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கேரள காவல்துறை கர்நாடக காவல்துறையின் உதவியை நாடியது. அப்போதுதான், தர்ஷிதா கர்நாடகாவின் சாலிகிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

தர்ஷிதாவும், கர்நாடகாவின் பெரியப்பட்டணத்தைச் சேர்ந்த சித்தராஜுவும் நீண்டகால கள்ளக்காதல் உறவில் இருந்தனர். தர்ஷிதா கர்நாடகாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம், தன்னுடைய கள்ள புருஷன் சித்தராசுவை தனிமையில் சந்தித்து தன்னை விருந்தாக்கி வந்துள்ளார்.

புகுந்த வீட்டில் தனக்கு வேண்டியதை கொடுக்க வேண்டிய கணவன் வெளிநாட்டிற்கு பணம் சம்பாதிக்க சென்று விட்ட நிலையில் தீராத உடலுறவு மோகத்தில் தவித்து வந்த தர்ஷிதா பிறந்த வீட்டிற்கு வரும் சாக்கில் தனக்கு வேண்டியதை தன்னுடைய கள்ளக்காதலனிடம் பெற்று உல்லாச பறவையாக பறந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து சுபாஷின் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி அதன் மூலம் புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், திட்டமிட்ட படி தர்ஷிதா நடந்து கொள்ளவில்லை. கணவன் வீட்டில் இருந்து திருடி வந்த பொருட்களில் பாதியை தன்னுடைய தாய் வீட்டிலேயே வைத்து விட்டு, மீதியை மட்டும் கள்ள காதலனுக்கு கொண்டு வந்துள்ளார் தர்ஷிதா.

அதனை, லாட்ஜில் ரகசியமாக சித்தராஜுவிடம் ஒப்படைத்து. இத்தனை நாட்களாக தன் உடலை கள்ள காதலனுக்கு கொடுத்த தர்ஷிதா தற்போது தன் கணவனின் உழைப்பையும் கொண்டு வந்து கொடுத்து விட்டார்.

ஆனால், தர்ஷிதா சொன்ன தொகையை விட குறைவான தொகை மற்றும் நகைகள் தான் கைக்கு வந்துள்ளது. மீதி எங்கே என்று ஆரம்பித்த இவர்களின் பேச்சு வார்த்தை, வாக்குவாதமாக மாறி கைகலப்பாக மாறியது.

ஒரு கட்டத்தில், கோபமடைந்த சித்தராஜு, தர்ஷிதாவின் வாயில் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் குச்சியை சொருகி வெடிக்கச் செய்து, அவரது முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர், அறையை பூட்டிவிட்டு தப்பியோடினார்.

கேரள காவல்துறை, கர்நாடகாவுக்கு சென்று சித்தராஜுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தர்ஷிதா ஏன் சுபாஷை திருமணம் செய்தார், சித்தராஜு ஏன் தர்ஷிதாவை கொலை செய்தார் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary : Darshitha, a 22-year-old from Kerala, stole 30 sovereigns of gold and 4 lakh rupees from her husband's home to elope with her lover, Siddaraju, in Karnataka. An argument in a Saligrama lodge led to Siddaraju killing her by detonating an electric detonator in her mouth.