சென்னை, கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் விடுதிக்கு அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். சோதனையின்போது, கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயது சிறுமி ஒருவர் வாடிக்கையாளருக்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட முயற்சி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, போலீசார் சிறுமியை மீட்டு, அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கே.கே. நகரைச் சேர்ந்த அஞ்சலி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா மற்றும் நாகராஜ் உள்ளிட்ட மூவர் கும்பலை கைது செய்தனர்.
விசாரணையில், சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றுவிட்டதாக தெரியவந்தது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுமி கே.கே. நகரில் உள்ள தனது தாயின் தோழியான அஞ்சலியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அஞ்சலி ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி, பலருக்கு விருந்தாக்கியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மீட்கப்பட்ட சிறுமி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary: Chennai police raided a lodge in Koyambedu after a tip-off about prostitution. A 20-year-old girl from K.K. Nagar was rescued, and three individuals, including Anjali, were arrested for attempting to involve her in prostitution. The girl was exploited by Anjali, her mother's friend, for three years.

