‘கள்ள புருஷனுக்கு அடிமையான பெண்’.. கணவனை பொம்மை போல தூக்கி செய்த கொடூரம்.. நடுங்கிப்போன போலீஸ்..

ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள பாதப்பட்டினம் கிராமம், பொதுவாக அமைதியான ஒரு கிராமம். ஆனால், ஒரு இரவு அந்த அமைதியை உடைத்து, ஒரு பயங்கரமான குற்றச் சம்பவம் அரங்கேறியது.

இது ஒரு விபத்து என்று தோன்றிய கதை, பின்னர் ஒரு கொடூரமான கொலைத் திட்டம் என தெரிய வந்த போது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் ஊர் மக்கள்.

என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம். நல்லி ராஜு, 35 வயதான குடும்பஸ்தர். மனைவி மௌனிகாவும், இரண்டு மகன்களும் அவரது உலகம். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பும் வழக்கமுடையவர். ஆனால், அந்த இரவு அவருக்கு விதி மரணத்தை பரிசாக கொடுக்க காத்திருந்தது.

நடு ரோட்டில் பைக்குடன் கவிழ்ந்து, பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார் நல்லி ராஜு. அந்த வழியாகச் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, பைக் ஒரு பக்கம் கிடந்தது. "வேகமாக வந்த கார் மோதியிருக்கலாம், ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்," என்று முதலில் கருதினர். சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். நல்லி ராஜுவின் மனைவி மௌனிகா மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதார்.

அனைவரும் இதை ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்தாகவே நினைத்தனர். ஆனால், உண்மை வேறு விதமாக இருந்தது.

பிரேத பரிசோதனையில் திருப்பம்

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபோது, வழக்கு தலைகீழாக மாறியது. நல்லி ராஜுவின் உடலில் விபத்து காரணமாக ஏற்பட்ட காயங்கள் இருந்தாலும், அவரது மரணத்துக்கு முக்கிய காரணம் வேறு.

தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, இரும்பு கம்பியால் தலையில் கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார். இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பது தெளிவாகியது.

காவல்துறை விசாரணையை புதிய கோணத்தில் தொடங்கியது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது. எந்த காரும், பைக்கும் நல்லி ராஜுவை மோதவில்லை.

மாறாக, ஒரு ஆணும் பெண்ணும் அவரது உடலை தூக்கி வந்து நடு ரோட்டில் வீசியிருந்தனர். அந்தப் பெண் வேறு யாருமல்ல, நல்லி ராஜுவின் மனைவி மௌனிகாவே தான்!

இறந்து போன தன்னுடைய கணவரை அப்படியே பொம்மை போல தூக்கி வந்து நடுரோட்டில் வீசியதை பார்த்த போலீசார் நடுங்கி போனார்கள்.

மௌனிகாவின் இரகசிய உறவு மௌனிகாவும், அதே கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவரும் இன்ஸ்டாகிராமில் தொடங்கிய அறிமுகத்தை, காதலாக மாற்றியிருந்தனர்.

முதலில் சாதாரண உரையாடலாக தொடங்கியது, பின்னர் மணிக்கணக்கில் பேச்சு, பரஸ்பரம் முகவரி பகிர்ந்து கொள்ளுதல், நல்லி ராஜு வீட்டில் இல்லாத நேரத்தில் உதயகுமார் அடிக்கடி வருவதும் இருவரும் உல்லாசமாக இருப்பதும் என கள்ள புருஷனுக்கு அடிமையானாள்.

ஊரான் வீட்டு மனைவியின் அடிமை சேவையை கண்டு பூரித்து போனான் உதயகுமார். வாழ்நாள் முழுதும் இந்த சேவையை பெற வேண்டும் என நினைத்தான் உதயகுமார். இதனால், இருவருக்குள்ளும் இருந்த இந்த உறவு நாளுக்க்கு நாள் ஆழமாகி கொண்டே போனது.

பேய்தனமான உடல் பசியில் இருந்த மௌனிகா, ஒரு கட்டத்தில் கணவன் வேண்டாம் என முடிவு செய்து உதயகுமாருடன் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற ஆசை வந்தது.

ஆனால், நல்லி ராஜு இந்த உறவைப் பற்றி அறிந்தபோது, வீட்டில் புயல் வீசியது. மௌனிகாவை வெளியே செல்லவிடாமல் கட்டுப்படுத்தினார். ஆனால், உதயகுமாரை மறக்க முடியாத மௌனிகா, காதல் நெடியும், காம வெறியும் கண்ணை மறைக்க ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டினார்.

மாஸ்டர் பிளான்

முதலில், உதயகுமார் பெண்ணின் பெயரில் ஒரு போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி, ஒரு பெண் என்ற பாவனையில் நல்லி ராஜுவுக்கு செய்தி அனுப்பினார். ஆரம்பத்தில், அந்த போலி பெண் கணக்கில் ஆவலுடன் பேசிய நல்லி ராஜூ அந்த போலியான பெண்ணின் அன்பில் மயங்கினார்.

ஆனால், நேரில் சந்திக்கலாம் என்று கேட்ட போது நல்லி ராஜு சந்திக்க மறுத்துவிட்டார். திட்டம் தோல்வியடைந்ததால், மௌனிகாவே களமிறங்கினார். ஒரு நாள், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த நல்லி ராஜுவுக்கு, உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார்.

மயக்கமடைந்த அவரை, உதயகுமாருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். பின்னர், விபத்து போல தோற்றமளிக்க, உடலை மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு எடுத்துச் சென்று, பைக்குடன் நடு ரோட்டில் வீசி விபத்து போல சித்தரிக்க முயற்சி செய்தனர்.

உண்மை வெளிப்பட்டது

காவல்துறையின் தீவிர விசாரணையில், மௌனிகா உண்மையை ஒப்புக்கொண்டார். உதயகுமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டனர்.

ஒரு விபத்து என்று தொடங்கிய கதை, ஒரு கள்ள உறவு, பொறாமை, மற்றும் கொடூரமான திட்டத்தின் முடிவாக மாறியது. பாதப்பட்டினம் கிராமம் இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை அழித்து, மௌனிகாவின் ஆசை ஒரு கணவனின் உயிரைப் பறித்தது. இந்த சம்பவம், மனித மனதின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

திருமணம் தாண்டிய உறவில் லயித்து உல்லாச பறவைகளாக உதயகுமாரும், மௌனிகாவும் தற்போது சிறைப்பறவைகளாக கூண்டில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று ஆசுவாசமடையும் அதே நேரத்தில் தந்தையை பலி கொடுத்து விட்டு, தாயை சிறைக்கு அனுப்பி விட்டு நிற்கதியாக நிற்கும் இரண்டு குழந்தைகளின் மனநிலை மற்றும் எதிர்கலாத்தை நினைக்கும் போது மனம் கனமாகிறது.

திருமணம் தாண்டிய உறவு என்பது பெண்களின் சுதந்திரம் என்று பேசித்திரியும் கழிசடைகள் இந்த குழந்தைகளின் நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள். இந்த சம்பவம், திருமணம் தாண்டிய உறவில் இருப்பவர்களுக்கு ஒரு தக்க பாடம். திருந்தி வாழவில்லை என்றால் முடிவு என்னவாக்கும் என்பதற்கு சான்று.

Summary : In Patharapattinam, Nalli Raju was found dead on the road, initially thought to be an accident. Post-mortem revealed he was drugged, strangled, and beaten. His wife Mounika, with lover Udayakumar, planned the murder, staging it as an accident. CCTV exposed their crime, leading to their arrest.