பட்டப்பகலில் நிர்வாண பூஜை.. தாயின் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்.. ஊரை நடுங்க வைத்த மரண ஓலம்..

திருப்பத்தூர் மாவட்டம், நாற்றாம்பள்ளி அருகே உள்ள ஊசி கல்மேடு கிராமத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் கிராமவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் குமரன் மீது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பரசுராமன் மற்றும் அவரது தம்பி சாந்தகுமார் ஆகியோர் நடுராத்திரி வீடு புகுந்து அம்மிக்கல்லால் தாக்கி கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரன், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர். சுதந்திர தினத்தையொட்டி, அவரது அண்ணன், அண்ணி, சித்தி, சித்தப்பா உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

பயணத்திற்கு தயாராகி, மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தச் சென்றபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பரசுராமன், கையில் எலுமிச்சை பழத்துடன் நிர்வாணமாக நின்று குமரனின் வீட்டு வாசலில் பூஜை செய்து கொண்டிருந்ததை கண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த குமரன், “எங்கள் வீட்டு வாசலில் இப்படி பூஜை செய்கிறாயா?” எனக் கேட்டு பரசுராமனை தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது.

குமரனின் தாயார் ஜெயலட்சுமி, கோயில் பயணத்திற்கு நேரமாகிவிடும், கோயிலுக்கு போகும் போது எதுக்கு சண்டை என்பதால் மகனை சமாதானப்படுத்தி, குடும்பத்துடன் திருத்தணி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பரசுராமன், குமரன் கோயிலில் இருந்து திரும்பி வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்ததாக தெரிகிறது.

கிராமவாசிகளின் கூற்றுப்படி, பரசுராமன் அடிக்கடி இரவு நேரங்களில் நிர்வாணமாக பூஜை செய்யும் பழக்கம் உடையவர். இதற்கு கிராம மக்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், அவர் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு, இரவு 10 மணியளவில் குமரனும் அவரது குடும்பமும் வீடு திரும்பினர். அன்று நடுராத்திரி, கிராமம் மயான அமைதியில் இருந்தபோது, குமரனின் வீட்டில் இருந்து அவரது அலறல் சத்தமும், அவரது தாயார் ஜெயலட்சுமியின் அழுகை சத்தமும் கேட்டது.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, குமரன் இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் அவரது தாயார் அழுதபடி உட்கார்ந்திருந்தார். இதனிடையே, பரசுராமனும் அவரது தம்பி சாந்தகுமாரும் வீட்டில் இருந்து தலைதெறிக்க ஓடி தப்பியதை அக்கம்பக்கத்தினர் கவனித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், பரசுராமனும் அவரது தம்பி சாந்தகுமாரும் நடுராத்திரி வீட்டிற்குள் புகுந்து, குமரனின் தலையில் அம்மிக்கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கிராமவாசிகளின் தகவலின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த பரசுராமனையும், சாந்தகுமாரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவத்திற்கு பின்னணியாக, பரசுராமனின் நிர்வாண பூஜைக்கு குமரன் எதிர்ப்பு தெரிவித்ததும், அதனால் ஏற்பட்ட முன்விரோதமும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல், ஊசி கல்மேடு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டத்தின் முன் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என கிராமவாசிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Summary: In Thirupathur's Oosi Kalmedu village, Kumaran was brutally attacked with a grinding stone by neighbor Parasuraman and his brother Santhakumar after a dispute over Parasuraman's nude ritual. The midnight assault left Kumaran critically injured. Police arrested the duo, and investigations continue.