சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது வினோத், சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் கிருஷ்ணவேணியின் (53) பாசமிகு அரவணைப்பில் வளர்ந்தவர். சென்னையில் முக்கிய இடங்களில் இருந்த சொத்துக்கள் மூலம் கிடைத்த வருமானம் இவர்களது வாழ்க்கையை செம்மையாக்கியது.
2023-ல் அரக்கோணத்தைச் சேர்ந்த வினோதினியை வினோத் திருமணம் செய்தார். மகிழ்ச்சியாகத் தொடங்கிய இவர்களது வாழ்க்கையில், திடீரென ஒரு நெருடல் உருவாகியது.

இதன் பின்னணியில் மறைந்திருந்த அதிர்ச்சிகரமான உண்மை, தம்பதியினரை அதிரவைத்தது.வினோத்தின் தாய் கிருஷ்ணவேணி, திருமணத்துக்குப் பிறகு மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் செல்லுமாறு திரும்பத் திரும்ப வற்புறுத்தினார்.
"நீங்கள் தனியாக வாழுங்கள், மாதச் செலவுக்கு பணம் கொடுத்தால் போதும்" என்று கூறிய அவர், கூட்டுக் குடும்பமாக வாழ விரும்பிய வினோத்தின் முடிவை மீறி, தனிக்குடித்தனம் பற்றி அடிக்கடி பேசி வந்தார்.
.jpg)
வினோத், "நானே அம்மாவின் ஒரே மகன், அவரை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டேன்" என்று உறுதியாக இருந்தார். வினோதினியும் இதை ஆதரித்தார்.ஆனால், கிருஷ்ணவேணியின் நடவடிக்கைகள் மீது வினோதினிக்கு சந்தேகம் எழுந்தது.
அவர் அடிக்கடி மருமகளை கோயிலுக்கு அனுப்புவது, வீட்டில் தனியாக இருக்க விரும்புவது போன்ற செயல்கள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றின. இதை கணவர் வினோத்திடம் பகிர்ந்து கொண்டபோது, அவரும் தாயின் சில செயல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஒப்புக்கொண்டார்.
.jpg)
இதையடுத்து, இருவரும் ஒரு தனியார் துப்பறியும் நிபுணரின் உதவியை நாடினர்.வினோத் மற்றும் வினோதினி வீட்டில் இல்லாத நேரங்களில், வீட்டிற்கு வருபவர்களை டிடெக்டிவ் கண்காணிக்கத் தொடங்கினார்.
உறவினர்கள் பலர் வந்து சென்றாலும், ஒரு மர்ம நபர் மட்டும் அவர்களுக்கு அறிமுகமில்லாதவராக இருந்தார். அந்த நபர், 500 மீட்டர் தொலைவில் காரை நிறுத்திவிட்டு, செருப்பைக் கழற்றி, வெறுங்காலுடன் வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
.jpg)
வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் இவரது வருகை தொடர்ந்தது.இரண்டு மாத கண்காணிப்புக்குப் பிறகு, டிடெக்டிவ் திரட்டிய ஆதாரங்கள், கிருஷ்ணவேணிக்கும் அந்த 35 வயது இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தின.
தனது காதலனுடன் தனிமையில் இருக்கவே, கிருஷ்ணவேணி மருமகளை கோயிலுக்கு அனுப்பி, தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தி வந்தது தெரியவந்தது.
53 வயதான கிருஷ்ணவேணி, 35 வயது இளைஞருடன் உறவு வைத்திருப்பது, வயது வித்தியாசம் காரணமாக அதிகாரப்பூர்வ திருமணத்துக்கு செல்லாமல், ரகசியமாக நடத்தி வந்தார்.இந்த உண்மை வெளிப்பட்டபோது, வினோதினியால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
.jpg)
டிடெக்டிவ், மேற்கொண்டு விசாரணை விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இந்த சம்பவம், கூட்டுக்குடும்பத்தில் நம்பிக்கை வைத்திருந்த தம்பதியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
50 வயதை தாண்டிய பெண் என்றாலும் கூட அவருக்கு தன்னுடைய உடல் சார்ந்த தேடுதல்கள் இருப்பதில் தவறு இல்லை. அது, அவருடைய இயற்கை. இது எல்லோருடைய இயற்கை. ஆனால், இதனை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா ஏற்றுக் கொள்ளாதா என்ற அச்சம்தான் அவரை கள்ளத்தனமான ஒரு உறவை மேற்கொள்ள தூண்டி இருக்கிறது.
.jpg)
இதில் யாரும் குற்றவாளி கிடையாது. சமூகத்தின் பார்வையில் சில விஷயங்கள் தவறானதாக, அசிங்கமாக தோன்றலாம். கிருஷ்ணவேணி உடன் தொடர்பில் இருக்கும் அந்த நபர் திருமணம் ஆகாதவர்.
எனவே, இந்த விஷயத்தில் யார் மீதும் தவறு சொல்வதற்கில்லை. ஆனால் சமூகத்தின் பார்வையில்.., ஏன் கிருஷ்ணவேனியின் மகன் பார்வையில் கூட இது தவறாக இருக்கலாம் அவருடைய மருமகள் பார்வையில் இது தவறாக தோன்றலாம். ஆனால், கிருஷ்ணவேணியின் பார்வையில்.. இயற்கையின் பார்வையில்.. இது குற்றமாகாது.
.jpg)
இது கள்ளக்காதல் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், அவர் கணவரை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு பெண். அந்த 35 வயது நபரும் திருமணம் ஆகாதவர். இதை சமூகம் எப்படி பார்க்கிறதோ அதை அப்படியே பார்த்துக் கொள்ளட்டும் நாம் இங்கே நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பதிவு செய்தார் அந்த டிடெக்டிவ் .
(பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, பெயர்கள் மற்றும் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன.)
Summary : Vinoth, 28, from Tambaram, Chennai, and his wife Vinodhini uncover a shocking secret about his mother, Krishnaveni, 53. Suspecting her behavior, they hire a detective who reveals Krishnaveni's illicit affair with a 35-year-old man, causing distress in their joint family.

