இந்த வயசுல உனக்கு இது தேவையா..? பெற்ற தாயை அடித்தே தீர்த்து கட்டிய மகன்கள்.. ஈரக்குலையை நடுங்க வைக்கும் சம்பவம்..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் புதிய காலனியைச் சேர்ந்த பொன்வேல் - வசந்தி தம்பதியினரின் வாழ்க்கையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, பயங்கரமான முடிவை எட்டியுள்ளது.

38 வயதான வசந்தி, தோட்ட வேலைக்கு செல்லும் வழக்கம் உடையவர். இவர்களுக்கு 21 வயதான கவின் மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

வசந்தியின் அடிக்கடி செல்போனில் பேசும் பழக்கம், குடும்பத்தில் பெரும் புயலை கிளப்பியது.வசந்தி, தோட்ட வேலையில் ஈடுபடும் ஒருவருடன் நெருங்கிய பழக்கம் வைத்திருந்ததாகவும், கடந்த நான்கு மாதங்களாக அவருடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்ததாகவும் ஊர்மக்கள் மூலம் தகவல் பரவியது.

இதனை மகன்கள் கவின் மற்றும் அவரது தம்பி கேள்விப்பட்டு, தாயின் நடவடிக்கைகளைக் கண்டித்து வந்தனர். மேலும், அவரது செல்ஃபோனில் தானியங்கி கால் ரெக்கார்ட்டு வசதியை ஏற்படுத்தி தாய் நிஜமாகாவே எதற்காக மணிக்கணக்கில் பேசுகிறார் என்பதை கண்டுபிடித்து என்றும் கூறுகிறார்கள்.

தாய் கள்ளக்காதலனுடன் பேசிய உரையாடல்களை கேட்ட பிறகு இருவரும் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.  "இந்த வயதில் இப்படி எல்லா நேரமும் போனில் பேசினால், ஊரார் என்ன நினைப்பார்கள்? வேலைக்கு போக வேண்டாம், வீட்டில் இரு," என்று கவின் மற்றும் அவரது தம்பி தாயிடம் கண்டித்து, செல்போன் பயன்பாட்டை நிறுத்துமாறு வற்புறுத்தினர்.

ஆனால், வசந்தி தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.பிப்ரவரி 17, 2025 அன்று காலையில், இதே பிரச்சனை குறித்து வசந்திக்கும் மகன்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கவின் மற்றும் அவரது தம்பி, தாயை அடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மதிய உணவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, மீண்டும் தகராறு வெடித்தது.

ஆவேசமடைந்த மகன்கள், வசந்தியை சரமாரியாக தாக்கினர். இதில், வசந்தி பேச்சு மூச்சின்றி மயங்கி விழுந்தார். கோபத்தில் இருந்த மகன்கள், அவரை அப்படியே விட்டுவிட்டு வெளியே சென்றனர்.மதியம் 3 மணியளவில், பக்கத்து வீட்டு பெண்மணி வசந்தியைப் பார்க்க வந்தபோது, அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வசந்தி வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆரம்பத்தில், வெளிப்புறக் காயங்கள் இல்லாததால், சாப்பிடாமல் மயக்கமடைந்திருக்கலாம் என நினைத்தனர். ஆனால், ஆம்புலன்ஸில் செல்லும் வழியில் வசந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்தது.

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், வசந்தி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அடிபட்டதால் மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு, உட்புறக் காயம் காரணமாக உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த ஏத்தாப்பூர் போலீசார், வசந்தியின் மரணம் குறித்து விசாரணை தொடங்கினர். விசாரணையில், வசந்திக்கும் மகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்தது தெரியவந்தது.

மகன்கள் கவின் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்தபோது, செல்போன் பேச்சு தொடர்பான கோபத்தில் தாயை அடித்தது உறுதியானது. மேலும், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வசந்தியின் கணவர் பொன்வேலையும் போலீசார் கைது செய்தனர்.

வெளிப்புறக் காயங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும், உட்புறக் காயங்கள் கடுமையாக இருந்ததால், மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு, காதில் இருந்து ரத்தம் வழிந்து வசந்தி உயிரிழந்தார்.

முழு விசாரணைக்குப் பிறகு, கவின், அவரது தம்பி மற்றும் பொன்வேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary : On February 17, 2025, Vasanthi (38) was fatally beaten by her sons, Kavin (21) and a 17-year-old, in Mettudayarpalayam, Salem, over disputes about her phone conversations. Found unconscious, she died en route to the hospital. Police arrested the sons and her husband, Ponnuvel, for abetting murder.