சென்னை : நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன், தனது காதலியை சந்திக்க அய்யனாவரத்தில் உள்ள அவளது பெரியம்மா வீட்டிற்கு சென்றதும், அங்கு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலியின் தந்தை சரவணன் மற்றும் உறவினர் லோகேஷ் ஆகியோர் மீது SC/ST (தாழ்த்தப்பட்ட சாதி/பழங்குடி) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த இந்த 18 வயது சிறுவன், முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பட்டாளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும்போது, அதே பள்ளியில் படித்த சிறுமியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

நாளடைவில் அது காதலாக மாறியது. இந்தக் காதல் விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்ததும், அவர்கள் சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல், அய்யனாவரம் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தங்கியிருந்த சிறுமி, தனது செல்போனில் இடுகையின் மூலம் தொடர்ந்து தனது காதலனைத் தொடர்பு கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த சிறுமி, "நீ கிளம்பி வா" என்று குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, சிறுவன் பெற்றோரிடம் "புத்தகம் வாங்கச் செல்கிறேன்" என்று சொல்லிவிட்டு, ரேப்பிடோவில் புக் செய்து அய்யனாவரத்திற்குச் சென்றார்.
அங்கு சாஸ்திரி பவனில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு வந்த சிறுவன், சிறுமியுடன் தனி அறையில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போதே வெளியே சென்றிருந்த சிறுமியின் பெரியம்மா வீட்டிற்கு வந்தார். இருவரும் வீட்டில் இருப்பதைப் பார்த்த அவர், உடனடியாகக் கதவைப் பூட்டி சிறுவனை சிறைப்படுத்தினார்.
பின்னர் சிறுமியின் தந்தை சரவணனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த சரவணன், 'பெரியேறும் பெருமாள்' பட பாணியில் சிறுவனை அறையில் அடைத்துவைத்து, ஜாதி ரீதியாகத் திட்டி, இரும்பு வளையத்தால் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுக்குறித்து மாணவனின் தாய் கூறும் போது, ரெண்டு முறை வெட்டிட்டு, மூணாவது முறை வெட்டும்போது கத்தி உடைஞ்சிடுச்சு. கத்தி உடைஞ்சதும், அந்த முள்ளு முள்ளா இருந்த கையில மாட்டி குத்தி இருக்காங்க. ரெண்டு கையில காயம் ஃபுல்லா இருக்கு. இவ்வளவு பெருசா வீங்கி போச்சு. ரெண்டு முட்டியும் நடக்க முடியல. குழந்தைக்கு முட்டியில அடிச்சிருக்காங்க. காது, பேக் சைடு எல்லாம் வீக்கமா இருக்கு.
தாக்குதலில் இரத்தம் சிந்தியபோது, சரவணன் தனது வேட்டி சட்டையை கழற்றி வைத்துவிட்டு, சிறுவன் அணிந்திருந்த மேல் சட்டையால் தரையில் இரத்தத்தைத் துடைக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அவரது மகனின் டீ-ஷர்ட்டை அணிவித்து, காயங்கள் தெரியாத வகையில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக சிறுவனின் தாய் தெரிவித்தார்.

மதியம் 2 மணிக்கு வெளியே சென்ற சிறுவன், இரவு 10 மணி ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் சந்தேகமடைந்தனர். ரேப்பிடோ புக் செய்த இடத்தை வைத்து தேடினர். அப்போது புளியந்தோப்பு போலீஸ் நிலையத்திலிருந்து போன் வந்தது. போலீஸார், "உங்க பையனை கூட்டிட்டு வந்து இங்க விட்டிருக்காங்க. நீங்க வாங்க" என்று கூறினார்.
போனதும், சிறுவனின் உடலில் இருந்த காயங்களையும் வீக்கத்தையும் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புளியந்தோப்பு போலீஸார் விசாரணை நடத்தி, சம்பவம் அய்யனாவரம் பகுதிக்கு உட்பட்டது என்பதால், அங்கு புகார் அளிக்கச் சொல்லி அனுப்பினர். ஆனால் அய்யனாவரம் போலீஸ் நிலையத்தில் கேஸ் பதிவு செய்ய மறுத்தனர். "இது நடந்த இடத்துலதான் பார்க்கணும். இங்க எடுக்க முடியாது" என்று சொன்னனர்.
பின்னர், தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.காயமடைந்த சிறுவனை பெற்றோர் காவல் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், போலீஸார் சிறுவனை விடவில்லை. வற்புறுத்தலுக்குப் பிறகு, கேஎம்சி (கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி) அனுமதிக்கப்பட்டார்.
தற்போது சிறுவன் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.சிறுவனின் தந்தை, "மூணு முறை ஸ்கெட்ச் போட்டோம். மூணாவது ஸ்கெட்ச்ல தான் நீ மாட்டினாய்" என்று சரவணன் தனது மகனிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
"2 மணிக்கு வந்த உடனே நைட் 8 மணி வரைக்கும் அடிச்சிருக்காங்க. 8 மணி அடிச்சு ஆட்டோல அய்யனாவரத்துல இருந்து புளியந்தோப்புக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.
'உன்ன அடிச்சு கொழுத்தி போட்டு ஆறு மாசத்துல ஜெயில்ல வெளிய வருவோம். உன் ஃபேமிலிக்கு நாங்க கெஞ்ச போட்டு வச்சிருக்கோம். மூணு கெஞ்ச போட்டுட்டோம்'னு சொல்லிருக்காரு."
சிறுவனின் தந்தை, முன்பு பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர், தற்போது கோவில் நிர்வாகியாகப் பணியாற்றுகிறார்.இந்தச் சம்பவம், இளம் காதல்களுக்காக பெற்றோரின் கோபம் எவ்வாறு வன்முறைக்குத் தள்ளுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
Summary : An 18-year-old boy from Chennai’s Nerkundram was brutally attacked in Ayanavaram by his girlfriend’s father, Saravanan, and relative, Lokesh, over their love affair. The boy was beaten, stabbed, and tortured. Both accused were arrested under SC/ST laws after the incident.
