பாதுகாப்புக்கு ஆணுறை வாங்கிட்டு வந்துடுங்க.. காதலனிடம் ஹஸ்கி வாய்சில் இளம் பெண்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

புதுச்சேரி திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு கோவில் அர்ச்சகரின் 21 வயது மகன், லாஸ்பேட்டை ஐ.டி. பார்க்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் செல்போன் ரொமான்ஸ் மூலம் ஒரு இளம் பெண் அறிமுகமாகியுள்ளார். அடிக்கடி கொஞ்சலான பேச்சில் அந்தப் பெண் பேசி, இளைஞரை மயக்கியுள்ளார்.

இதன் விளைவாக, அந்த இளம் பெண்ணை இந்திரா காந்தி சதுக்கம் அருகே நேரில் சந்தித்து பேசிய இளைஞர், அவளது ஆசைத் தூண்டலால் அவளுடன் உல்லாசமாக இருக்க தனி இடத்திற்கு செல்ல சம்மதித்தார்.

எந்த காரணம் கொண்டு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, மெடிக்கல் ஷாப்க்கு போய் ஆணுறை வாங்கிட்டு வந்துடு என்று ஹஸ்கி குரலில் இளைஞருக்கு கட்டளையிட்டுள்ளார் அம்மணி.

வாலிப முறுக்கில் ஆணுறை வாங்கி வந்த அந்த இளைஞரிடம் 'எனக்கு ஒரு அழகான இடம் தெரியும்' என்று கூறி, கோட்டக்குப்பம் கடற்கரை அருகே உள்ள பழைய பட்டினச் சாலையில் அமைந்துள்ள 'ப்ளூ டிக் பீச் ஹவுஸ்' என்ற லாட்ஜூக்கு இளைஞரை அழைத்துச் சென்றார்.

அங்கு வந்து கதவை சாத்தியவுடன், அந்தப் பெண் என்னை வீட்டில் தேடுவாங்க.. சீக்கிரம்.. சீக்கிரம் என கூறி இளைஞரின் ஆடைகளை விரைவாக கழற்றி, அவரை மயக்கியுள்ளார்.

என்ன நடக்கிறது..? இது கனவா..? நிஜமா..? என்று மெய்மறந்து நின்ற இளைஞருக்கு திடீரென கதவை தட்டும் சத்தம் கேட்டது. அந்தப் பெண் கதவைத் திறந்ததும், பிரபல ரவுடி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சுகன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்தது.

அவர்கள் இளைஞரை கடுமையாகத் தாக்கி, சித்திரவதை செய்ய தொடங்கினர். பின்னர், அவரது கழுத்தில் மாலையாக மொபைல் போனை வைத்து, 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டனர். திகைத்து நின்ற இளைஞர், தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்து கொண்டு, தன்னை ஏமாற்றி அழைத்துவந்தது இந்தப் பெண்ணின் சூழ்ச்சி என்பதை அறிந்தார்.

அப்போது, என்னிடம் தற்போது பணம் இல்லை. வீட்டில் இருக்கிறது, உங்களில் யாராவது இரண்டு பேர் உடன் வந்தால், பணத்தை எடுத்து தருகிறேன்' என்று அச்சுறுத்தினர்.

ரவுடி சுகனின் கும்பலில் இரண்டு பேர் மட்டும் இளைஞரை அழைத்துக்கொண்டு, தெருமுனையில் இரண்டு நபர்களை நிறுத்தி, அவர்களிடம் நிலவரத்தைத் தெரிவிக்கச் சொன்னது.

வீட்டின் உள்ளே சென்ற ஐடி ஊழியர் உடனடியாக தன்னுடைய பெற்றோர்களிடம் இந்த விபத்தை கூறியுள்ளனர். போலீஸாரின் விரைந்த செயல்பாட்டால், விசுவநாதன் தலைமையில் போலீஸ் குழு அந்தப் பகுதிக்கு விரைந்து வந்தது.

விசாரணையில், அந்த குடியிருப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பிரதீப் என்கிற சுகன் மற்றும் அவரது நான்கு பேரின் கூட்டுத்சதி இது என்பது தெரியவந்தது.

தற்போது, போலீஸார் ரவுடி சுகன் மற்றும் அவரது கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், தவறான செல்போன் அழைப்புகளில் பேசும் பெண்களை நம்பி, தவறான பாதையில் சென்றால் ஏற்படும் விபரீதங்களுக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

போலீஸ் அதிகாரிகள், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க, இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.

Summary: A 21-year-old IT employee from Puducherry was lured by a woman via phone to a beach house, where a gang led by notorious rowdy Sugan attacked him, demanding ₹10 lakh. The police were informed, and the gang, including Sugan, is now being hunted.