பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த், சமீபத்தில் வெளியான மதராஸி திரைப்படத்திற்கு அளித்த விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய இந்தப் படத்தை, பிரசாந்த் தனது விமர்சனத்தில் ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், படத்தின் கதை, திருப்பங்கள், எதிர்பார்ப்பு, அல்லது சென்டிமென்ட் காட்சிகள் எதுவுமே தெளிவாக இல்லை என விமர்சித்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரசாந்த் தனது விமர்சனத்தில் மதராஸி படத்தின் குறைகளை வெறும் அரை நிமிடத்திற்கும் குறைவாகவே பேசியதாகவும், மற்ற நேரங்களில் படத்தை அளவுக்கு மீறி புகழ்ந்ததாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளை பாராட்டிய பிரசாந்த், படத்தின் திரைக்கதையில் உள்ள பலவீனங்களை பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை என்பது ரசிகர்களின் முக்கிய புகார்.இதற்கு மாறாக, சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தை பிரசாந்த் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை, ரசிகர்களையும் ரஜினியையும் ஏமாற்றியதாக பிரசாந்த் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், மதராஸி படத்திற்கு அவர் அளித்த மிகைப்படுத்தப்பட்ட புகழாரம், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பிரசாந்தின் விமர்சன நேர்மையை கேள்விக்குள்ளாக்கி, ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.மதராஸி படத்தின் கதை, தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை புகுத்த முயலும் வடமாநில கும்பலுக்கும், அதை தடுக்க முயலும் NIA அதிகாரிகளுக்கும் இடையேயான மோதலை மையமாகக் கொண்டது.

சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்து ரசிகர்களுக்கு பரிமாறப்பட்டாலும், திரைக்கதையில் உள்ள பலவீனங்கள் படத்தின் தரத்தை பாதித்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
பிரசாந்தின் விமர்சனத்தில் உள்ள இந்த முரண்பாடு குறித்து, ஒரு ரசிகர் தனது எக்ஸ் பதிவில், "பிரசாந்த் கூலி படத்தை தோலுரித்து விமர்சித்தவர், ஆனால் மதராஸியை இவ்வளவு புகழ்ந்தது ஏன்? இது நியாயமான விமர்சனமா, இல்லை வேறு ஏதோ உள்நோக்கமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னுடைய விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் ஆரம்பக் கட்சியாக வரும் டோல்கேட் அருகே நடக்கும் துப்பாக்கி சூடு சண்டை காட்சி தத்ரூபமாக பிரம்மாண்டமாக இருக்கிறது என புகழுகிறார் விமர்சகர் பிரசாந்த்.
அந்த முதல் காட்சியிலேயே தெரிந்துவிடும் மதராசிபுரம் எவ்வளவு மகா மட்டமான திரைப்படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது. டிராபிக் போலீஸ் கிடையாது, லோக்கல் போலீஸ் கிடையாது, உளவுத்துறை கிடையாது, ராணுவம் கிடையாது, அரசாங்கம் கிடையாது, இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான கும்பலை பிடிப்பதற்கு என் ஐ ஏ என்ற ஒரே ஒரு அமைப்பு தான் இருக்கிறது, அந்த அமைப்பு வெறும் நான்கு அதிகாரிகளை மட்டுமே அனுப்பி இந்த கும்பலை பிடிக்க போகிறது என்று நம்பவே முடியாத மிகவும் மோசமான ஒரு காட்சியை படத்தின் ஆரம்பக் காட்சியாக காட்டுகிறார்கள்.

ஆனால், இந்த காட்சியை விமர்சகர் பிரஷாந்த் தத்ரூபமாக இருக்கிறது பிரம்மாண்டமாக இருக்கிறது என கூறிக் கொண்டிருக்கிறார். மற்றொரு ரசிகர், "படத்தில் கதையே இல்லை, ஆனால் பிரசாந்த் அதை சூப்பர் ஹிட் என்கிறார். இது ரசிகர்களை ஏமாற்றுவது போல இல்லையா?" என பதிவிட்டுள்ளார்.
உதாரணத்திற்கு படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி பற்றி பார்ப்போம், இந்தியாவில் ராணுவம் என்று ஒன்று இருக்கிறதா..? அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா..? அல்லது பாதுகாப்பு படை என்று ஒன்று இருக்கிறதா..? உள்துறை அமைச்சகம் என்று ஒன்று இருக்கிறதா..? உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறதா..? என்று சந்தேகத்தை எழுப்பும் விதமான ஒரு மோசமான திரை கதையுடன் படத்தில் சுத்தமாக ஒட்டவே முடியாத படியான காட்சி அமைப்புகளுடன் படம் பார்ப்பவர்களை, அவர்களுடைய பொறுமையை சோதிக்கும் விதமாக ஒரு திரைப்படத்தை எடுத்து வைத்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.
காட்சிப்படி, யாருமே எளிமையாக அணுக முடியாத இடம், அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இடம் என்று Dark House என்ற ஒரு கட்டடத்தில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட அலுவலகத்தில் இருக்க வேண்டும் நகரின் மையத்தில் இருக்கும் அலுவலகம் ஒன்றுக்கு படை பரிபானங்களுடன்கதாநாயகன் கதாநாயகி இருவரையும் NIA தலைமைஅதிகாரி அனுப்பி வைக்கிறார்.
அந்த அலுவலகத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் இருக்கிறார்கள். நிலைமை இப்படி மோசமாக இருக்க கதாநாயகன் நான் என்னுடைய மாத்திரையை மறந்து வைத்து விட்டு வந்து விட்டேன் என்று யாருமே செல்ல முடியாத ரகசியமான இடம் என்று சொல்லப்படும் Dark House-க்கு ஒரு ஆட்டோவில் கிளம்பி செல்கிறார் கதாநாயகன்.
நடுக்காட்டில் இருக்கும், வெளியாட்கள் யாருக்கேமே தெரியாத ஒரு இடத்திற்கு ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு சாதாரணமான செல்கிறார் கதாநாயகன். இதுபோல படத்தில் ஏகப்பட்ட மண்டை குடச்சலை கொடுக்கும் காட்சிகள் படத்தில் நிரம்பி இருக்கின்றன.

ஆனால் இந்த படத்தை ஆகா ஓகோ என புகழும் விதமாக இட் இஸ் பிரசாந்த் விமர்சனம் செய்திருக்கிறார் பிரசாந்த். இந்த சர்ச்சை, விமர்சகர்களின் பொறுப்பு மற்றும் நேர்மையை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பிரசாந்தின் மதராஸி விமர்சனம் குறித்து ரசிகர்களின் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary : Film critic Prashanth's glowing review of Madrasi has sparked backlash from fans, who criticize its lack of story, twists, or emotional depth. Despite heavily panning Coolie recently, his praise for Madrasi shocked fans, leading to widespread criticism on social media for perceived bias.
