‘வீட்டில் மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்..’ கணவர் செய்த தரமான சம்பவம்.. சாரே கொல மாஸ்..!

ஆந்திர மாநிலம், காக்கிநாடா, ராமராவ் பேட்டையைச் சேர்ந்த லட்சுமணன், இறால் பண்ணை நடத்தி வருபவர். இவரது மனைவி நாகலட்சுமி, தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகள் உள்ளார்.

லட்சுமணன், வழக்கமாக இரவு நேரங்களில் இறால் பண்ணைக்கு காவலுக்கு சென்று அதிகாலையில் வீடு திரும்புவார்.

இந்நிலையில், நாகலட்சுமி, தனது கல்லூரி மாணவர் மணிகண்டாவுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நாகலட்சுமியும் மணிகண்டாவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து லட்சுமணனுக்கு சந்தேகம் இருந்தபோதிலும், அவர் மனைவியிடம் நேரடியாக கேள்வி எழுப்பவில்லை.

நேற்றிரவு வழக்கம்போல் இறால் பண்ணைக்கு சென்ற லட்சுமணன், திடீரென மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார்.

வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, நாகலட்சுமியும் மணிகண்டாவும் தனியாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்தார். உடனடியாக வீட்டின் அனைத்து கதவுகளையும் வெளியே இருந்து பூட்டி, உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினர், வீட்டில் இருந்த நாகலட்சுமியையும் மணிகண்டாவையும் கையும் களவுமாக பிடித்தனர். ஆத்திரத்தில் மணிகண்டாவை தாக்க முயன்ற லட்சுமணனை போலீசார் தடுத்து நிறுத்தி, மணிகண்டாவை கைது செய்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழு வயது மகள் வீட்டில் இருக்கும்போதே நாகலட்சுமி மற்றும் மணிகண்டா இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், காக்கிநாடாவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Summary : In Kakinada, Andhra Pradesh, Lakshman, a shrimp farm owner, caught his wife Nagalakshmi, a college teacher, in an extramarital affair with her student Manikanta. Suspecting infidelity, Lakshman locked them in their house and alerted police, who arrested Manikanta, causing a local uproar.