கள்ளக்காதலனுடன் மனைவி.. வீடியோவில் அந்த விஷயத்தை பார்த்த கணவன்.. நடுரோட்டில் சுட்டே கொன்ற கொடூரம்..

குவாலியர், செப்டம்பர் 23 : மத்திய பிரதேசத்தின் குவாலியரில், பிரிந்த மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பார்த்து கொதித்த கணவன் அரவிந்த் பரிஹார், அவளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை தனது பேஸ்புக் கணக்கில் லைவாக வீடியோவாகப் பதிவிட்ட அரவிந்த், போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவளுக்கு இது தேவை தான், எங்க பேச்சை கேக்காத இவளோ பிணத்தை நாங்க வாங்க மாட்டோம் என கொல்லப்பட்ட நந்தினியின் உடலை அவரது பெற்றோரே வாங்க மறுத்ததும், சம்பவத்தின் கொடுமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம், காதல், உல்லாசம் மற்றும் வெறியின் கலவையாக உருவெடுத்தது. குவாலியரைச் சேர்ந்த அரவிந்த் பரிஹார் (35), ஏற்கனவே திருமணமானவராக இருந்தபோதும், 2022ஆம் ஆண்டு சமூக வலைதளங்கள் மூலம் நந்தினி (28) என்ற இளம்பெண்ணைச் சந்தித்தார்.

நந்தினி, விவாகரத்து பெற்ற நிலையில் இருந்தார். இருவரும் நண்பர்களாகத் தொடங்கி, காதலிக்கத் தொடங்கினர். 2023ஆம் ஆண்டு இருவரும் சம்மத திருமணம் செய்துகொண்டனர்.திருமண வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், அரவிந்த் சில கிரிமினல் சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர், அவருக்கு ஏற்கனவே குழந்தைகள் இருக்கிறது என்று நந்தினிக்குத் தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டன. இந்தச் சூழலில், நந்தினிக்கு அங்கூர் என்ற நண்பர் கிடைத்தார். அரவிந்தை விட்டு, அங்கூருடன் ஊர் சுற்ற தொடங்கிய நந்தினி அவருடன் உல்லாசகமாகவும் இருந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அங்கூரின் பணிவிடைகள் பிடித்து போகவே, அவருடனேயே வாழவும் தொடங்கினார்.இது அரவிந்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் நந்தினி குறித்து தவறான தகவல்களைப் பரப்பினார்.

அதற்குப் பதிலடியாக, நந்தினியும் அரவிந்த் குறித்து மோசமான விமர்சங்களை வெளியிட்டார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.சமீபத்தில் அங்கூரின் பிறந்தநாள் வந்தது.

தன்னுடைய முன்றாவது கணவனான அங்கூரின் பிறந்தாளை நந்தினி, அவருடன் சேர்ந்து கொண்டாடி, அதன் வீடியோவைப் பேஸ்புக்கில் பதிவிட்டார். அதில் அங்கூர், நந்தினிக்குக் கேக் ஊட்டும் காட்சியைப் பார்த்து கொதித்த அரவிந்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

அது தான், மனைவி கள்ளக்காதலனுடன் லூட்டி அடிக்க பயன்படுத்தும் வாகனம். தன்னுடைய கார் என்பது, வீடியோவில் தன்னுடைய காரை பார்த்த கணவன், மனைவியை போனில் அழைத்து " கள்ளக்காதலனுடன் ஊர் சுற்ற, என்னோட கார் தான் உனக்கு கிடைச்சதா.. எனக்கு துரோகம் பண்ணிட்டு.. என்னோட கார்லயே ஊர் சுத்திரியா.. உன்னை கொலை செய்வேன்" என்று மிரட்டினார்.

அதிர்ச்சியடைந்த நந்தினி, உடனடியாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகார் அளித்து திரும்பிய நந்தினியை, கிரிக்கெட் மைதானத்தின் முன் வழிமறித்த அரவிந்த், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, நந்தினியை நோக்கிச் சுட்டார்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த நந்தினியின் தலையில் மீண்டும் சுட்டு, வெறியாட்டம் ஆடினார் அரவிந்த். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அலறி ஓடினர். நந்தினியைச் சுட்டுக் கொன்ற பிறகு, துப்பாக்கியை அசைத்துக்காட்டி பேஸ்புக் லைவ் வீடியோ போட்ட அரவிந்த், சம்பவத்தை உலகுக்கு நேரடியாகக் காட்டினார்.

இதைப் பார்த்து பதறிய மக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸாரைப் பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அரவிந்த், கையில் துப்பாக்கியை அசைத்து மிரட்டினார். கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசி, போலீஸார் அவரைப் பிடித்தனர்.

அப்போது கோபத்தில் கொதித்த பொதுமக்கள், அரவிந்துக்கு தர்ம அடி கொடுத்தனர்.போலீஸ் விசாரணையில், "நந்தினி எனது பணமும் கார்களும் எடுத்துக்கொண்டு அங்கூருடன் சுற்றியதால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்" என்று அரவிந்த் வாக்குமூலம் அளித்தார்.

கொல்லப்பட்ட நந்தினியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.இதற்கிடையே, பிரேதப் பரிசோதனை முடிந்த நந்தினியின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர்.

"தனது பேச்சைக் கேட்காத மகளின் உடலை வாங்க விருப்பம் இல்லை" என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால், உறவினர் ஒருவர் உடலைப் பெற்று, இறுதி மரியாதை செய்தார்.இந்தச் சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் உளவியல் அழுத்தம் குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளன. போலீஸார், அரவிந்த் மீது கொலை மற்றும் மிரட்டல் வழக்குகளில் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவத்தின் முழு விவரங்களுக்காக விசாரணை தொடர்கிறது.

Summary : In Gwalior, Madhya Pradesh, Arvind Parikar shot dead his estranged wife Nandini in rage after viewing her birthday video with lover Ankur. Married in 2023 amid his criminal past, they separated when she left with his assets. He live-streamed the murder on Facebook before police arrested him; Nandini's parents refused her body.