“என் பொண்டாட்டிகளை நீ வச்சிக்கோ.. ஆனா,..” எனக்கு.. பெருசு செய்த அதிர்ச்சி சம்பவம்.. குளத்தில் மிதந்த இளசு..

மயிலாடுதுறை, செப்டம்பர் 21 : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தகாத உறவு காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளிடம் ஒன்றிய அதிமுக வணிகர் அணி நிர்வாகியான ராஜாவும் அவரது இரு மனைவிகளுடனும் கொண்டிருந்த உறவை மறைக்க 10 லட்சம் ரூபாய் கேட்டு இளைஞரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல்துறை சிறப்பு அணியை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறது.

மேல்குத்தவக்கரை கிராமத்தைச் சேர்ந்த 35 வயது லட்சுமணன், கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி அஞ்சலியும், இரு மகள்களும் உள்ளனர்.

கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த உறவினர் ராஜா (ராமச்சந்திரன்) என்பவருடன் அவர் நெருக்கமாகப் பழகினார். கொள்ளிடம் கடைத்தெருவில் மாவுமில் நடத்தும் ராஜா, அதிமுக வணிகர் அணி நிர்வாகியாக இருந்து அரசியல் செல்வாக்கு பெற்றவர். அவருக்கு சசிகலா, சத்யா என இரு மனைவிகளும் உள்ளனர்.

நாளடைவில் லட்சுமணனுக்கும் ராஜாவின் மனைவிகளுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ராஜாவுக்கு தெரியவந்ததும், அவர் கோபத்தில் லட்சுமணனை அழைத்து டீல் பேசியுள்ளார்.

என் ரெண்டு பொண்டாட்டிகளையும் நீ வச்சிகிட்டு இருக்குற விஷயத்தை மறைக்க 10 லட்சம் ரூபாய் கொடு.. இல்லனா உன்னை கொன்னு போட்ருவேன்.. என்று கொலை மிரட்டல் விடுத்தார். என்று அச்சுறுத்தியதாக லட்சுமணனின் மனைவி அஞ்சலி கூறுகிறார். (வடிவேலு பேக்கரி காமெடி போல இருக்குல்ல..)

இதையடுத்து தலைமறைவான லட்சுமணனைத் தேடி ராஜா, அவரது தந்தை சம்பந்தம், நண்பர் ராகுல் உள்ளிட்டோருடன் சேர்ந்து வலை வீசினார். அஞ்சலியிடமும் 10 லட்சம் கேட்டு, லட்சுமணனின் இருப்பிடத்தை அறிய மிரட்டினர்.

கடந்த ஜூலை மாதம் அஞ்சலி கொள்ளிடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்தனர். இருப்பினும், ராஜா செல்போனில் தொடர்ந்து மிரட்டி, லட்சுமணனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தார்.

கடந்த வியாழக்கிழமை இரவு, அஞ்சலியுடன் வீடியோ கால் செய்துகொண்டிருந்த லட்சுமணனை ராஜாவும் கூட்டாளிகளும் பிடித்து இழுத்துச் சென்றனர். வீடியோவில் அந்தச் சம்பவத்தை அஞ்சலி பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

"நேற்று நைட்டு போல போன் பேசுனான். பாப்பா எனக்கு ஒரு வரமா ஜொரங்க... அண்ணா காட்டான்... ராஜா, ராகுல் உள்ளிட்ட ஐந்து பேர் வந்து என்னைப் பிடித்துட்டு போய்ட்டாங்க. போனது இல்லாம நான் அடிக்கறேன்... அப்படின்னு மெசேஜ் போட்டுட்டாங்க" என்று அஞ்சலி கரகோஷமாகக் கூறினார்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை அஞ்சலி சீர்காலி டிஎஸ்பி, மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார். இருப்பினும், சனிக்கிழமை காலை கொள்ளிடம் அருகே தெற்குராஜன் வாய்க்காலில் வெட்டுகாயங்களுடன் லட்சுமணனின் சடலம் மீட்கப்பட்டது.

"கணவர் உயிருக்கு ஆபத்து என்று புகார் அளித்திருந்தேன். உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்" என்று அஞ்சலி வேதனை தெரிவித்தார்.

சத்யாவின் எச்சரிக்கை ஆடியோ வெளியானது

சம்பவத்தைத் தொடர்ந்து, ராஜாவின் இரண்டாவது மனைவி சத்யாவும் லட்சுமணனும் இடையேயான செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில் சத்யா, "நீ இங்க வராதடா... உன்ன வெட்டணும்னு ராஜா தேடிட்டு இருக்கான். எங்கப் பாத்தாலும் ஆள் வச்சிருக்கான். உன்ன வெட்டணும்னு அங்கங்க போட்டு இருக்கான்" என்று லட்சுமணனை எச்சரித்திருக்கிறார். இந்த ஆடியோ, ராஜா கூலிப்படையை ஏற்பாடு செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறது.

குற்றவாளிகள் தலைமறைவு - போலீஸ் தேடல்

லட்சுமணன் கொலைக்குப் பிறகு ராஜா, அவரது தந்தை சம்பந்தம், தாய் அமுதா, நண்பர் ராகுல், உறவினர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் தலைமறைவாகியுள்ளனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு அணி அமைக்கப்பட்டு, அவர்களைத் தேடி வருகிறது. "கடந்த மூன்று மாதங்களாக ஓடிக்கொண்டிருந்த விவகாரத்தில் போலீஸ் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலை நடக்கவில்லை" என்று லட்சுமணனின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம், அரசியல் செல்வாக்கு கொண்டவர்களின் மிரட்டல் மற்றும் கொலை சதி குறித்து பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இப்போது, லட்சுமணனின் காதல் மனைவி அஞ்சலி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Summary in English : In Mayiladuthurai, 35-year-old Lakshmanan was hacked to death and dumped in a canal near Kollidam after an alleged affair with the two wives of AIADMK trader wing leader Raja. Raja demanded Rs 10 lakh to cover it up, threatening murder. Despite police complaints, Lakshmanan was abducted during a video call with his wife Anjali and killed. Raja and family are absconding; police hunt them.