கோழிக்கோட்டின் கசா காவல் நிலையத்தின் முன் ஒரு மாலைப் பொழுது. கண்ணீரும் பதற்றமும் கலந்த முகத்தோடு ஒரு தம்பதி காவல் நிலையத்திற்குள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்த காவலர்கள், “என்ன ஆயிற்று? ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
வார்த்தைகள் தொண்டையில் தடுமாற, அவர்கள் ஒரு கைப்பட எழுதப்பட்ட புகார் கடிதத்தை நீட்டினர். அதைப் படித்த காவலர்களுக்கு, அந்தப் பெற்றோரின் கண்ணீருக்குப் பின்னால் இருந்த கொடூரமான உண்மை தெரியவந்தது.

கோழிக்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி, ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு, பத்தாம் வகுப்பிற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு டியூஷன் மையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயின்று வந்தாள்.
செவ்வாய்க்கிழமை அன்றும் வழக்கம்போல டியூஷனுக்கு சென்றிருந்தாள். முடிந்த பிறகு, பேருந்தில் ஏறி, வீட்டுக்கு அருகிலுள்ள நிறுத்தத்தில் இறங்கி, நடந்து சென்று கொண்டிருந்தாள்.பேருந்து நிறுத்தத்திற்கும் அவள் வீட்டிற்கும் இடையில் ஒரு இருள் சூழ்ந்த பகுதி இருந்தது. அங்கு மின் விளக்குகள் இல்லை; இருட்டு மட்டுமே ஆட்சி செய்தது.
அந்த இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த இருவர் அவளைப் பிடித்து இழுத்தனர். ஆள் நடமாட்டமற்ற அந்த இடத்தில், அந்தச் சிறுமி பயத்தால் கத்தி, கூச்சலிட்டாள். அவர்கள் அவளை பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றனர். ஆனால், அந்தச் சிறுமி தைரியத்துடன் அவர்களைத் தள்ளிவிட்டு, கத்திக்கொண்டே அருகில் இருந்த வெளிச்சமான பகுதியை நோக்கி ஓடினாள்.
அங்கு சிலர் இருந்ததால், அந்த இரு மிருகங்களும் அவளைத் தொடராமல் தப்பி ஓடினர்.வீட்டிற்கு வந்து, நடந்த கொடூரத்தை தன் பெற்றோரிடம் கூறி அழுதாள் சிறுமி. “இதை இப்படியே விடக்கூடாது. இல்லையென்றால், வேறு ஒரு பெண்ணுக்கு இதே நிலை ஏற்படலாம்,” என்று முடிவு செய்த அவள் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.
புகாரைப் பெற்ற காவலர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். காட்சிகளில், இருளில் சிறுமி நடந்து வருவதும், இருவர் அவளை அத்துமீற முயல்வதும், அவள் கத்திக்கொண்டு தப்பி ஓடுவதும் பதிவாகியிருந்தது. ஆனால், அந்த இருவரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் பகுதியில் உள்ள கடைக்காரர்கள், நடந்து சென்றவர்கள் எனப் பலரிடம் விசாரித்தும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
அப்போதுதான், சம்பவ இடத்தில் ஒரு செருப்பு கிடப்பது காவலர்களின் கண்ணில் பட்டது. அந்த செருப்பில் சிமெண்ட் ஒட்டியிருந்தது. “இவர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக இருக்கலாம்,” என்று யூகித்த காவலர்கள், அந்தப் பகுதியில் நடந்து கொண்டிருந்த கட்டுமானப் பணிகளைப் பட்டியலிட்டனர்.
மறுநாள் காலை, அந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று, சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து சந்தேகத்திற்குரியவர்களைத் தேடினர்.பலரை விசாரணைக்கு அழைத்து, சிறுமியின் முன் நிறுத்தினர். அப்போது, இருளில் தன்னை அத்துமீறிய இருவரையும் சிறுமி தெளிவாக அடையாளம் காட்டினாள்.
கிடுக்குப்பிடி விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான பைசன் அன்வரும், 18 வயதான எமன் அழியும் என்பது தெரியவந்தது. இருவரும் கோழிக்கோட்டில் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். ஆள் நடமாட்டமற்ற இடத்தில் சிறுமியைத் தனியாகப் பார்த்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது.
காவலர்கள் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஒரு செருப்பும், அதில் ஒட்டியிருந்த சிமெண்டும், ஒரு கொடூரச் செயலைச் செய்தவர்களைப் பிடிக்க வழிவகுத்தது. சிறுமியின் தைரியமும், காவலர்களின் சாமர்த்தியமும், அந்த அரக்கண்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது.
இது போன்ற பரபரப்பான குற்ற சம்பவங்கள் மற்றும் திடுக்கிடும் திரில்லர் குற்றங்கள் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள Crime Tamizhakam Telegram சேனலை பின் தொடருங்கள்.
Crime Tamizhakam... participantsSummary : In Kozhikode, a 15-year-old girl escaped a sexual assault attempt by two men while walking home from tuition. Police used CCTV footage and a cement-stained slipper to identify and arrest the culprits, construction workers from Bihar, ensuring justice through diligent investigation.

