கோழி முட்டை புதிருக்கு அறிவியல் பதில் : கோழி வந்ததா..? முதலில், முட்டை வந்ததா..? சொல்லு.. கொக்கர கொக்கோ என்று சினிமா பாடல் வரும் அளவுக்கு உலக பிரபலமான கேள்விக்கு அறிவியல் பூர்வமான பதில் கிடைத்துள்ளது.
முதலில் வந்தது கோழி தான். ஆம், முதலில் கோழிதான் வந்தது!சதாமண்டலங்கள் காலமாக கோழியா முட்டையா முதலில் வந்தது என்பது பெரும் விவாதமாக இருந்தது.

ஆனால் நவீன உயிரியல் ஆராய்ச்சி இப்போது தெளிவான பதிலை கிடைத்துள்ளது. கோழி தான் முதலில் வந்தது!
விஞ்ஞானிகள் கண்டறிந்தபடி, கோழியின் முட்டை உருவாகும் முக்கிய புரதமான 'ஓவோக்ளீடின்-17' (OC-17) என்பது கோழியால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதம். இந்த புரதம் உலகின் எந்த உயிரினத்திலும் இல்லை. இந்த புரதமின்றி முட்டை உருவாகாது.
அதாவது, முதலில் கோழி இல்லாமல் கோழி முட்டை வந்திருக்க முடியாது.பரிணாம வியல் கோணத்தில், கோழியின் மூதாதையர்கள் கோழி போன்றவையாக இருந்தாலும், இறுதி மரபணு மாற்றம் கோழியில் நடைபெற்று அது முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையை பெற்றிருக்க வேண்டும்.
இதனால் முதலில் கோழி தான் பிறந்தது, பின்னர் அதன் முட்டை. இது வெறும் கோழி-முட்டை பற்றிய அறிவியல் மட்டுமல்ல; பரிணாமத்தின் வடிவமும், படைப்பின் தொடக்கமும் ஆகும். "கோழி முதலில் வந்தது – பரிணாமத்தின் வடிவமாகவும்," என்கிறது இந்த கண்டுபிடிப்பு.
Summary : For centuries, the chicken-or-egg dilemma baffled minds, but science reveals the chicken came first. The protein ovocleidin-17, unique to chicken ovaries, is crucial for eggshell formation—impossible without a prior chicken. Evolutionarily, a genetic mutation in a near-chicken ancestor birthed the first true chicken, followed by its egg. This underscores creation preceding continuity.


