2026 கமல்ஹாசன் தான் விஜய்..! அவர் வாயாலேயே கொடுத்த சாட்சி..! என்ன நடக்குது தவெகவில்..!

மாமல்லபுரம், நவம்பர் 6: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும், முதலமைச்சர் வேட்பாளராக விஜய்யை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பதாகவும் நேற்று (நவம்பர் 5) நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 தேர்தலில் கமல்ஹாசன் செய்ததுபோல், விஜய்யும் திமுகவுக்கு மறைமுக உதவியாக நிற்கிறாரா என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவது உட்பட, கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவர் தனிமையில் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

"திமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு எதிரான கூட்டணியே தவெக தலைமையில் அமையும்" என்று விஜய் தனது உரையில் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, தவெகவின் தேர்தல் உத்தியை தெளிவுபடுத்தினாலும், அதன் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியல் கணக்குகளை அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

2021 'கமல்ஹாசன் மாதிரி'யா விஜய்?

2021 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் (ம.நி.ம) தனித்துப் போட்டியிட்டது. திமுகவை பிரதான எதிரியாக முன்னிறுத்தி, அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டிய வாக்குகளை சிதறடித்ததாக அக்கட்சி கருதப்படுகிறது.

ம.நி.ம பெற்ற வாக்கு சதவீதம் 2.5% ஆனாலும், அது திமுகவின் வெற்றிக்கு மறைமுக உதவியாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்குப் பின், ம.நி.ம தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்; கமல்ஹாசன் தற்போது ராஜ்யசபா எம்பியாகப் பணியாற்றுகிறார்.

இதேபோல், தவெகவும் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. "திமுக, தவெக இடையேயே 2026 தேர்தல் போராட்டம் நடக்கும்" என்று விஜய் கூறியது, அவரது வாக்கு வங்கியை (8-20% எனக் கணிக்கப்படும்) அதிமுக-பாஜக வாக்காளர்களிடமிருந்து ஈர்க்கும் உத்தியாகக் கருதப்படுகிறது.

"விஜய்யின் வாக்குகள் திமுக எதிர்ப்பு வாக்காளர்களிடமிருந்து வரும். தனித்துப் போட்டியிட்டால், அதிமுக கூட்டணிக்கு இழப்பு ஏற்படும்; திமுக எளிதாக 120-130 இடங்களைப் பெறும்" என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனித்துப் போட்டியிடலின் ஆபத்துகள்: கட்சி 'துண்டாட்டல்' சர்ச்சை

தவெக முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. விஜய்யின் ரசிகர் பட்டாளம் வலுவானது என்றாலும், 8-20% வாக்குகளால் ஒரு தொகுதியை வெல்ல முடியாது, இதில் மாதம் 1000 ரூபாய் திட்டம் நிறுத்தப்படும், இலவசங்கள் எதுவும் தவெக தேர்தல் அறிக்கையில் இருக்காது என கூறுவது எல்லாம் கிராம, நகர பகுதி வாக்களர்களை தவெகவை விட்டு நகர்த்தி செல்லும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிமுக-பாஜக கூட்டணியுடன் சேர்ந்தால், விஜய் எதிர்க்கட்சித் தலைவராக உயர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆனால், தனித்துப் போட்டியிட முடிவு, "கமல்ஹாசன் போல திமுகவுக்கு உதவி" என சந்தேகத்தைத் தூண்டுகிறது. இதற்கு, அவர் வாயாலேயே கொடுக்கும் சாட்சி தான், ரெண்டே ரெண்டு பேருக்கு இடையே போட்டி என விஜய் பேசுவது.

தேர்தலுக்குப் பின், கட்சி தலைவர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாகவும், கோடிக்கணக்கான செலவுகளால் கடன் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கார்கள் எச்சரிக்கின்றனர்.

விஜயகாந்தின் தே.மு.தி.க, கமல்ஹாசனின் ம.நி.ம போன்று தவெகவும் 'துண்டாடப்பட' வாய்ப்பு உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். "மக்கள் நீதி மையம் என்ற கட்சி இன்று இருக்கிறதா என மக்கள் சந்தேகப்படுகின்றனர்" என ஒரு மூத்த அரசியல்வாதி கூறினார்.

கூட்டணி முடிவில் மாற்றமா? எதிர்காலம் என்ன?

தவெகவின் பொதுக்குழு, கூட்டணி முடிவுகளை விஜய்யிடம் ஒப்படைத்துள்ளது. ஆனால், சமீபத்தில் தவெக 70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி கொடுக்கும் 'மிகப்பெரிய கட்சி'யுடன் கூட்டணி அழைப்பு விடுத்தது போல் செய்திகள் வந்துள்ளன. 

1967, 1977 தேர்தல்களுடன் ஒப்பிட்டு விஜய் பேசியது, அவரது உறுதியை வெளிப்படுத்துகிறது.அரசியலில் நேரமும் காலமும் முக்கியம் என்கிறார்கள். தனித்துப் போட்டியிட்டு 15-20% வாக்குகளைப் பெற்றாலும், அடுத்த தேர்தலில் அதே வலிமை இருக்குமா என சந்தேகம்.

"விஜய்யின் முடிவில் மாற்றம் வருமா? தவெக தனித்துநிற்குமா அல்லது கூட்டணியில் சேருமா?" என்பதே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தல், தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்யும் என்பதில் ஐயமில்லை.

Summary : Tamilaga Vettri Kazhagam (TVK), led by actor Vijay, decided at its first general council to contest the 2026 Tamil Nadu assembly elections independently, forming alliances only with parties endorsing Vijay as CM candidate. Political observers draw parallels to Kamal Haasan's 2021 solo run, which allegedly split anti-DMK votes, aiding DMK's win. Critics fear TVK's fragmentation post-polls could ensure DMK's majority return, questioning Vijay's true strategy.