சடலமாக கிடந்த மனைவி.. தரையில் கிடந்த தனி உறுப்பு.. உண்மை தெரிந்ததும் புகார் கொடுக்க மறுத்த கணவர்..

நவம்பர் 30, 2025: ஆந்திரா மாநிலத்தின் வேல்துருத்தி கிராமத்தில் வசித்து வந்த 35 வயது பெண் உஜ்மா, தனது கணவருக்கு தெரியாமல் இரு ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதன் விளைவாக, ஒரு காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நவம்பர் 28 இரவு 8 மணியளவில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், உஜ்மாவின் உடலில் 48 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது.

மேலும், அவரது விரல்கள் வெட்டப்பட்டு, தனியுறுப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையில், உஜ்மா உயிருடன் இருக்கும் போதே இந்த சிதைவுகள் ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. "இது மிகவும் கொடூரமான கொலைகளில் ஒன்று," என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

உஜ்மாவும் அவரது கணவர் மஸ்தானும் 15 ஆண்டுகளுக்கு மேலாக திருமணமான தம்பதியினர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். மஸ்தான், தெலுங்கானாவில் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிந்து, குடும்ப செலவுகளுக்கு பணம் அனுப்பி வந்தார்.

ஆனால், உஜ்மா வீட்டில் இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முன்னாவுடன் நட்பு ஏற்பட்டது. இது போன் அழைப்புகள், வாட்ஸ்அப் சாட், வீடியோ கால்கள் வழியாக விரிவடைந்து, கள்ளக்காதலாக மாறியது.

விசாரணையில், "கணவர் வெளியூரில் இருக்கும் போது, பின்வாசல் வழியாக முன்னாவை வீட்டுக்குள் அழைத்து உறவு கொண்டார் உஜ்மா," என தெரியவந்துள்ளது. முன்னா, உஜ்மாவுக்கு 5,000 முதல் 10,000 ரூபாய் வரை பண உதவி செய்துள்ளார்.

இதேசமயம், உஜ்மா ஒரு அரசியல் கட்சியில் உதவியாளராக சேர்ந்தார். அங்கு மற்றொரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டு, கட்சி அலுவலகம், லாட்ஜ், ஓயோ ரூம்களில் உறவு கொண்டார்.இரு ஆண்களுடன் உறவு இருப்பதை அறிந்த முன்னா, கோபமடைந்து உஜ்மாவை எச்சரித்தார்.

"நான் கொடுத்த பணத்தை திருப்பி தா," என கோரினார். ஆனால், உஜ்மா தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி போலீசில் புகார் செய்ததால், முன்னா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெயிலில் வெளியே வந்த முன்னா, பழிவாங்கல் திட்டம் தீட்டினார்.

நவம்பர் 28 இரவு, உஜ்மா வீட்டுக்கு திரும்பியபோது, முன்னா பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நீ தான் என் புருஷன் என சொல்லி பணம் வாங்கி செலவு செய்து, வேறொருவனுடன் சேர்ந்து என்னை சிறைக்கு அனுப்பினாய்," என கத்தியபடியே கொலை செய்தார்.

உஜ்மாவின் செல்போனை எடுத்துக்கொண்டு, வீட்டு சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை அழித்துவிட்டு தப்பினார்.அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் உஜ்மா கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

"குற்றவாளி கட்டையான உருவம் கொண்டவன்," என அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததன் அடிப்படையில், முன்னா கைது செய்யப்பட்டார். தெலுங்கானாவில் இருந்து ஓடி வந்த மஸ்தான், "குடும்பத்துக்காக உழைத்தேன், ஆனால் இப்படி ஒரு துரோகம்! என் மனைவி இறப்பு குறித்து புகார் கொடுக்க விரும்பவில்லை," என கதறினார்.

இப்போது அவர் நான்கு குழந்தைகளுடன் அனாதையாக நிற்கிறார்.இந்த சம்பவம், கள்ளத்தொடர்புகளின் அழிவை உணர்த்துகிறது. சினிமா மற்றும் சமூக வலைதளங்கள் இதற்கு ஊக்கமளிப்பதாக கூறப்படுகிறது.

டும்ப உறுப்பினர்களிடையே நம்பிக்கை மற்றும் தொடர்பை வலுப்படுத்த வேண்டும்," என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Summary in English : In Andhra Pradesh's Velthuruthi village, 35-year-old Uzma, married to Masthan with four children, secretly engaged in extramarital affairs with two men. Her lover Munna, enraged after discovering her second affair and being jailed on her complaint, brutally murdered her by stabbing 48 times, severing fingers, and mutilating private parts. Masthan, a construction worker, is left devastated with the children. The incident highlights the destructive consequences of infidelity.