மானந்தவாடி, நவம்பர் 26, 2025 : வயநாட்டின் அமைதியான கிராமமான வெள்ளமுண்டா கண்டத்துவயலில், புதுமணத் தம்பதியரின் உயிரைப் பறித்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
அந்த கொலை வழக்கில், பிரதான குற்றவாளியான விஸ்வநாதன் குற்றவாளி என வயநாடு கல்பெட்டா செஷன் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியுள்ளது. திங்கட்கிழமை அன்று தண்டனை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு, கொலை செய்யப்பட்ட உமர் மற்றும் ஃபாத்திமா தம்பதியரின் குடும்பத்திற்கு சிறிது ஆறுதலாக இருந்தாலும், அந்த இரவின் கொடூரத்தை நினைக்கும் போது இன்னும் நெஞ்சு பதைபதைக்கிறது.
2018 ஜூலை 6-ஆம் தேதி, இரவின் அமைதியில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. கண்டத்துவயல் பூரிஞ்ஞியில் வாழயில் வசித்து வந்த 26 வயது உமர் மற்றும் அவரது 19 வயது மனைவி ஃபாத்திமா, தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய சில நாட்களிலேயே கொடூரமான முடிவை சந்தித்தனர்.
அவர்களின் படுக்கையறையில், இரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்களை கண்டு கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது. புதுமணத் தம்பதியரின் கனவுகள், ஒரு மிருகத்தின் கொடூரத்தால் சிதைந்து போனது – இது ஒரு சாதாரண திருட்டு அல்ல, உயிர்களைப் பறிக்கும் கொடூர வெறி!
போலீஸ் விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மைகள்:
யார் இந்த விஸ்வநாதன்..? வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வேலைக்கு செல்லக்கூடிய ஒரு ஆசாமி. இவன் மர வேலைகளை செய்யக்கூடிய ஒரு ஆசாரி. தன்னுடைய பகுதியிலேயே மர வேலைகளை செய்து கொண்டு காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தான்.
பொதுவெளியில் சாதுவாக உலாவிக் கொண்டிருக்கும் இவனுடைய மறுபக்கம் மிகவும் கொடூரமானது. ஆம், இவன் வசிக்கும் பகுதியில் புதிதாக திருமணம் முடிந்து வரக்கூடிய தம்பதிகளின் அந்தரங்க நேரத்தை திட்டமிட்டு மறைந்திருந்து பார்த்து ரசிப்பது இவனுடைய கொடூர பக்கம்.
அந்தப் பகுதியில் ஏதேனும் புதிதாக திருமணம் நடைபெறுகிறது என்றால் அந்தப் பகுதியை சுற்றி சுற்றி வரும் இவன் உறவினர்களோடு உறவினர்களாக கலந்து புதுமண தம்பதிகள் இருவரும் எங்கே முதலிரவு கழிக்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு ஜன்னல் வழியாக, கூரை வழியாக, சுவற்றில் இருக்கும் ஓட்டை வழியாக இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை ஏற்பாடு செய்து அதன் வழியாக புதுமண தம்பதிகள் தனிமையில் இருக்கக்கூடிய அந்தரங்க நேரத்தை பார்த்து ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் விஸ்வநாதன்,
இதே போல, புதிதாக திருமணமான உமர், ஃபாத்திமா இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்து ரசிக்கலாம் என்று திட்டமிட்டு அவர்கள் வீட்டை குட்டி போட்ட பூனையாக சுற்றி வந்துள்ளான்.
சம்பவம் நடந்த இரவில். திடீரென உமர், ஃபாத்திமாவின் படுக்கயறையில் மின் விளக்கு எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்த விஸ்வநாதன், இருவரும் தற்போது உல்லாசமாக இருக்க போகிறார்கள். அதை பார்த்து ரசிக்கலாம் என ஒரு பூனை பூனை போல அந்த வீட்டிற்குள் ஊடுருவினான். ஏற்கனவே, அந்த வீட்டில் மரவேலை செய்தவன் என்பதால் வீட்டின் அமைப்பு அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது.
திட்டமிட்டது போல அவர்களின் படுக்கரையை எட்டிப்பார்த்தான்விஸ்வநாதன். ஆனால், தண்ணீர் குடிப்பதற்காக மட்டுமே லைட் போட்டுள்ளார்கள் என்று தெரிந்து கொண்டு ஏமாந்து போனான்.
அதன் பிறகு, வந்தது வந்து விட்டோம், எதையாவது திருடிக்கொண்டு சென்று விடலாம் என பக்கத்து அறையில் இருந்து பீரோவை திறக்க முயற்சித்தான்விஸ்வநாதன். ஆனால், கிரீச் என்று பீரோவில் இருந்து வந்த சத்தம் இரவின் நிசப்தத்தை கிழித்தது.
உறங்கிக் கொண்டிருந்த உமர் சட்டென கண் விழித்தார். எழுந்து சென்று பார்த்த போது விஸ்வநாதன்.. உமருக்கு நல்ல பழக்கமான நபர் தான் என்பதால் நீங்க என்ன பண்றீங்க..? இங்க.. என்றான்.. அடுத்த நிமிடமே கையில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு உமரை தாக்கினான் விஸ்வநாதன். அந்த சத்தம் கேட்டு எழுந்த ஃபாத்திமாவும் திருட்டை எதிர்க்க முயன்றார். ஆனால், விஸ்வநாதனின் கையில் இருந்த இரும்பு கம்பி, அவர்களின் வாழ்க்கையை முடித்தது.
கொடூரமாக அடித்துக் கொன்ற பிறகு, மரணம் உறப்பானதை உறுதி செய்து, பாத்திமாவின் ஆபரணங்களை கொள்ளையடித்தான். வீட்டைச் சுற்றி மிளகாய்ப் பொடி தூவி, தடயங்களை அழித்து தப்பினான்.
இந்த கொடூரம், ஒரு கிராமத்தின் அமைதியை சிதைத்தது; புது வாழ்க்கையின் கனவுகளை இரத்தத்தில் கரைத்தது. இரண்டு மாத கடும் விசாரணைக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் விஸ்வநாதனை போலீஸ் கைது செய்தது.
"திருட்டை எதிர்த்ததால் கொலை செய்தான்" என போலீஸ் கண்டறிந்தது. 2020 நவம்பரில் வழக்கு விசாரணை தொடங்கியது. கல்பெட்டா செஷன் கோர்ட் நீதிபதி வி. ஹாரிஸ், சாட்சிகளின் அடிப்படையில் விஸ்வநாதனை குற்றவாளி என அறிவித்தார்.
இந்த தீர்ப்பு, நீதியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது, ஆனால் கொலை செய்யப்பட்ட தம்பதியரின் குடும்பத்தின் வலி இன்னும் ஆறவில்லை. வாழ்கையை ஆசையுடன் எதிர்நோக்கி காத்திருந்த உமர் மற்றும் ஃபாத்திமாவின் கனவுடன் ஒரே இரவில் சிதைந்து போனது.
புது வாழ்க்கையின் இனிமையை சுவைக்கத் தொடங்கியவர்கள், ஒரு கொடூரனின் இருட்டு நிழலால் அழிக்கப்பட்டனர்.
Summary in English : In Wayanad's Vellamunda Kandathuvayal, newlyweds Ummar (26) and Fathima (19) were brutally murdered in their bedroom on July 6, 2018, during a robbery attempt. Accused Vishwanathan (45) entered their home, tried to steal Fathima's jewelry, and killed them with an iron rod when they resisted.

