பெங்களூரு, நவம்பர் 18, 2025 : பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு கடந்த நவம்பர் 13-ஆம் தேதி இரவு 11:25 மணிக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல் ஒன்று வந்தது.
rajivsett**p@gmail.com என்ற ஜிமெயில் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், "என் முன்னாள் மனைவியான பத்மினியை வேலை நேரம் முடிந்த பிறகு மனரீதியாக துன்புறுத்தினால், உங்கள் மெட்ரோ நிலையங்களில் ஒன்று வெடித்துச் சிதறும்.

கன்னடர்களுக்கு எதிராக நானும் ஒரு தீவிரவாதி போன்ற தேசபக்தன்" என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.இந்த மின்னஞ்சலை BMRCL இன் உதவலர் பொறியாளர் (சைபர் செக்யூரிட்டி) ரத்தீஷ் தாமஸ் கண்டறிந்து, நவம்பர் 14 அன்று வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முதலில் non-cognisable புகாராக பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற அனுமதி பெற்று நவம்பர் 15 அன்று FIR பதிவு செய்யப்பட்டது. புதிய பாரதிய நியாய சட்டத்தின் (BNS) பிரிவு 351(2), 351(3) ஆகியவற்றின் கீழ் குற்றவியல் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், மின்னஞ்சலை அனுப்பியது கடுகொடி பகுதியைச் சேர்ந்த 62 வயது நபர் ராஜீவ் என்பது தெரியவந்தது. கடந்த 15 ஆண்டுகளாக மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் இவர், கடந்த 5 ஆண்டுகளாக NIMHANS-இல் மனநல சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
முக்கியமாக, மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்ட பத்மினி என்ற பெண் BMRCL-இல் பணியாளராக இல்லை என்பதும் போலீசார் உறுதி செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அனுப்பப்பட்ட போலி மிரட்டல் என்பது தெரிகிறது.
போலீசார் ராஜீவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த கால போலி மிரட்டல்கள் நினைவுகூர்தல்:
சமீபத்தில் பெங்களூருவில் பல பள்ளிகளுக்கு போலி குண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. குஜராத் அகமதாபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ரெனி ஜோஷில்டா என்பவர் கைது செய்யப்பட்டார்.
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது பெயரில் பல மாநிலங்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. அக்டோபர் 28 அன்று பெங்களூரு கொண்டு வரப்பட்ட அவர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மிரட்டல் அனுப்பியதாக ஒப்புக்கொண்டார்.
பெங்களூருவில் போலி மிரட்டல்கள் தொடர்வதால், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குடும்பத்துல சண்டைனா, இப்படி வெடிகுண்டு வைப்பேன்னு கிளம்பினா என்ன பண்றது!? எல்லாம் ஒரு அளவுக்கு தான் ப்ரோ..!Summary : A 62-year-old mentally ill man from Bengaluru sent a bomb threat email to BMRCL on Nov 13, warning to blow up a metro station if his ex-wife Padmini was harassed by staff. Police traced and arrested him; no such employee exists, threat deemed hoax.
