சென்னை, நவ. 27 : சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமணமான முதல் நாளன்று தனது மனைவி வெளிப்படுத்திய விபரீத ஆசையால் விரக்தியடைந்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம்.

புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஸ்வா (33) என்பவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண தகவல் மையம் மூலம் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்திற்குப் பின் புதுப்பெண் கணவரின் வீட்டிற்கு வந்தார். முதலிரவு அன்று (24-ம் தேதி) அறைக்குள் சென்றவுடன் அகஸ்டின் ஜோஸ்வா உடனடியாக தாம்பத்திய உறவு கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால், புதுப்பெண் தன்னுடைய விபரீத ஆசையை வெளிப்படுத்தினார்.
அவர், "முதல்ல ஒரு ரெண்டு நாள்.. இருவரும் மனம் விட்டுப் பேசுவோம்.. அதன் பிறகு மேற்படி சமாச்சாரங்களை தொடங்கலாம்" என்று கூறினார். மனைவியின் விபரீத ஆசையை கண்டு அதிர்ச்சியான அகஸ்டின்ம அதற்கு சம்மதிக்காமல், இப்போதே உறவு கொள்ளலாம் என வலியுறுத்தினார்.
ஆனால், புதுப்பெண் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த அகஸ்டின், அறையில் இருந்த சுத்தியலை எடுத்து அவரை சரமாரியாகத் தாக்கினார். இதில் பெண்ணின் கைகள், கால்கள் மற்றும் நெற்றியில் காயங்கள் ஏற்பட்டன.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பெண் கூச்சலிட்டார். ஆனால், அகஸ்டின் அவரை அறையில் பூட்டிவிட்டு தப்பியோடினார்.மயக்க நிலையில் இருந்த பெண் இரவு முழுவதும் அறையிலேயே இருந்தார். மறுநாள் காலை உறவினர்கள் அறையைத் திறந்து அவரை மீட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஜெரீனா பேகம் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜு விசாரணை நடத்தினர்.அகஸ்டின் ஜோஸ்வா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று தாக்குதலுக்கு பயன்படுத்திய சுத்தியலுடன் அவர் வேப்பேரி காவல் நிலையத்திற்கு வந்தார்.
போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
அதில் அவர் கூறிய ரகசியம் பகீர் ராகம், "திருமண தகவல் மையம் மூலம் இருதரப்பும் பேசித்தான் திருமணம் முடிவானது. அகஸ்டின் தன்னை வசதி படைத்தவன் எனக் கூறினார். வரதட்சணை வேண்டாம் என்றார். ஆனால், வீட்டிற்கு வந்த பிறகு அவர் ஏற்கனவே இரு பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ஒரு பெண்ணுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அதைப் பொருட்படுத்தாமல் நான் அவருடன் வாழ விரும்பினேன். ஆனால், அவர் மனம் விட்டுப் பேசாமல் என்னுடன் உறவில் ஈடுபடுவதிலேயே குறியாக இருந்தார்.
பேசிக்கொண்டு இருந்த போதே, திடீரென தாக்கினார். உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம். இனி அவருடன் வாழ முடியாது" என்று தெரிவித்தார்.இச்சம்பவம் புதுமணத் தம்பதிகளிடையே நம்பிக்கை மற்றும் புரிதல் இல்லாமை குறித்து சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரி, நீங்க சொல்லுங்க மக்களே.. என்ன சொன்னாலும் மனைவியை சுத்தியலால் தாக்கியது தவறு தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதே நேரம், பெண் செய்தது சரியா..? அல்லது கணவன் விட்டு கொடுத்து போயிருக்கலாம் என்று தோன்றுகிறதா..? ஆயிரம் கனவுகளுடன் புது மனைவியுடன் முதலிரவை கழிக்க சென்ற கணவனிடம் முதலில் மனசு விட்டு பேசலாம் என மனைவி கூறியது தவறா..? கல்யாணத்துக்கு முன்னாடியே மனசு விட்டு பேசாமல்.. முதலிரவில் வந்து மனசு விட்டு பேசலாம் என்று கணவனின் எதிர்பார்ப்பை நொறுக்கியது நியாமா..? இங்கே இருவரின் பாலினம் தாண்டி சிந்தித்து பாருங்கள். யார் மீது தவறு என்று உங்களுக்கு தோன்றுகிறதோ.. அதை கமெண்ட் செக்ஷனில் சொல்லுங்கள்.
Summary : In Chennai, a 33-year-old groom, Agustin Joshua, brutally attacked his 24-year-old bride with a hammer on their wedding night after she refused immediate sexual relations and asked for time to bond. She suffered severe injuries and was hospitalized. The husband was arrested on attempt-to-murder charges.
