“அப்போ அது விஜய் இல்லையா..? திருப்பாச்சி படத்தில் நடந்த மாற்றம்” சீக்ரெட் உடைத்த பேரரசு!

பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு, நடிகர் விஜய் நடிப்பில் திருப்பாச்சி படத்தை இயக்கிய சுவாரஸ்மான அனுபவங்கள் சிலவற்றை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, திருப்பாச்சி நேரத்தில், விஜய் சார் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக இருந்தார். 'திருமலை', 'கில்லி' போன்ற படங்களுக்குப் பிறகு அவர் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் அவருக்குள்ளே இருக்கும் அபாரமான காமெடி சென்ஸ் இருக்கு" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 'திருப்பாச்சி' படத்தின் கதை விவாதத்தின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். "நான் முதலில் கதை சொல்லும் போது, கோழி/ஆடு வெட்டும் சீனில் பெஞ்சமினுக்கு பதிலாக விஜய் சாரையே கட்டிவைத்து, மாலை போட்டு, தண்ணி ஊத்தி காமெடி செய்யலாம் என்று ஐடியா வைத்திருந்தேன். ஆனால், ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு ஆடு போல மாலை போட்டு தண்ணி ஊத்தி.. இதெல்லாம் ரசிகர்கள் ஏற்பார்களா என்ற சந்தேகத்தில் விட்டுவிட்டேன்.

படப்பிடிப்பின் போது, விஜய் சார், ஒரு சின்ன தயக்கத்துடன் கேட்டார் – 'அந்த ஆடு வெட்டும் சீனில் பெஞ்சமின் பதிலாக நானே செய்யலாமா?' என்று. அப்போதும் நான் கொஞ்சம் பயந்தேன். ஏனென்றால் அப்போதே விஜய் சார் பெரிய ஆக்ஷன் ஹீரோ, மாஸ் ஹீரோ. கழுத்தில் மாலை போட்டு, தண்ணி ஊத்தி, ஆடு வெட்டுவது போல நடிப்பாரா என்று தயக்கமாக இருந்தது. ஆனால், அவர் தானாகவே கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

உடனே 'சூப்பர் சார், ரொம்ப நல்லா வரும்' என்று சொன்னேன். பிறகு பெஞ்சமினை பின்னுக்குத் தள்ளிவிட்டு, விஜய் சாரையே கட்டிவைத்து 'ஆத்தா சம்பவம் சொல்லு ஆத்தா, நாங்க உனக்கு என்ன குறை வச்சோம்' என்று காமெடி கலந்து எடுத்தோம். அது அபாரமாக வொர்க் அவுட் ஆனது."

விஜய்யின் இயல்பான காமெடி திறமை குறித்து பேரரசு மேலும் கூறுகையில், "விஜய் சார் இன்று பெரிய கமர்ஷியல் ஹீரோவாக தெரிந்தாலும், அவருக்குள்ளே இருக்கும் காமெடி சென்ஸ் ரொம்பவே ஜாஸ்தி. 

என்னுடைய 'திருப்பாச்சி' ஆகட்டும், 'சிவகாசி' ஆகட்டும்... முதல் பாதி முழுக்க ஹ்யூமராகவே கொண்டு போவோம். இரண்டாவது பாதிதான் ஆக்ஷனும் செண்டிமெண்டும் வரும். விஜய் சார் ரொம்பவே காமெடி பண்ணக்கூடியவர்" என்றார்.

விஜய்யின் மறைமுகமான காமெடி திறமைக்கு 'திருப்பாச்சி' படமே மிகப்பெரிய உதாரணம் என்பதை இயக்குனர் பேரரசின் இந்த நெகிழ்ச்சியான நினைவுகள் மீண்டும் நிரூபிக்கின்றன.

Summary : Director Perarasu reveals that Vijay himself suggested performing the iconic goat-sacrifice comedy scene in Thirupaachi instead of comedian Benjamin. Despite being a mass action hero post-Gilli, Vijay’s natural comedy sense shone through, making the first half hilarious and the film a blockbuster.