100+ அந்தரங்க வீடியோஸ்! இதுக்குனே தனி வீடு.. ஆணுறையில் இருந்த விஷயம்.. மிரள வைத்த மெடிக்கல் ஷாப் ஓனர்!

சென்னகிரி, டிசம்பர் 09, 2025 : கர்நாடக மாநிலம், தாவனே மாவட்டத்தின் சென்னகிரி டவுன் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் அம்ஜத் என்பவரின் அதிர்ச்சியூட்டும் செயல்கள் வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான இவர், தனது கடைக்கு மருந்து வாங்க வரும் இளம் பெண்களை வலையில் வீழ்த்தி, அவர்களுடன் அந்தரங்க உறவு கொண்டு வீடியோக்களைப் பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போலீசார் அவரது செல்போனில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களைக் கண்டெடுத்துள்ளனர், இதில் 30க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

அம்ஜத், தனது மருந்து கடையைப் பயன்படுத்தி, இளம் பெண்களை ஈர்க்கும் தந்திரங்களைப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் உபாதைகளுடன் வரும் பெண்களிடம், "டாக்டரிடம் செல்ல வேண்டாம், நான் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிடுங்கள். நோய் உடனடியாகக் குணமாகும்" என சட்டத்திற்கு மாறாக ஆலோசனை வழங்கி, அவர்களை ஈர்த்துள்ளார்.

மருத்துவர்களின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே மாத்திரைகளை விற்று, அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். படிப்படியாக, மருத்துவ ஆலோசனையிலிருந்து குடும்பப் பிரச்சினைகள், அந்தரங்க விஷயங்கள் வரை பகிர்ந்துகொள்ளச் செய்த அம்ஜத், உளவியல் நிபுணர்போல் நடித்து அவர்களை மயக்கியுள்ளார்.

வறுமையில் இருக்கும் பெண்களுக்கு பணம் வழங்கி அல்லது மிரட்டி, தனது தனி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு. இந்தச் செயல்களை வீடியோவாகப் பதிவு செய்து, பின்னர் அந்த வீடியோக்களைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் அவர்களை மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சில பெண்கள், சென்னகிரி காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்பி உமா பிரசாந்த் ஆகியோரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் அம்ஜத்தைக் கைது செய்து, அந்த வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்திய போது, அங்கே குவியல் குவியலாக பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத ஆணுறைகள் கண்டிபிடிக்கப்பட்டது.;

இதனை தொடர்ந்து, அம்ஜத்தை சிறையில் அடைத்தனர். விசாரணையின் போது, அவரது செல்போனில் இருந்த வீடியோக்கள் வெளியாகின. துரதிர்ஷ்டவசமாக, கைது செய்யப்பட்ட பிறகும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களில் பரவத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து எஸ்பி உமா பிரசாந்த் கூறுகையில், "இந்த ஆபாச வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம். அதை மீறி பகிர்ந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.

இச்சம்பவம், மருந்து கடைகளில் சட்டத்திற்கு மாறான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary : In Chennagiri, Karnataka, a married pharmacist named Amjad was arrested after police recovered over 100 obscene videos from his phone involving more than 30 young women. He allegedly lured victims with illegal medical advice, money, and threats, recorded assaults, and blackmailed them. Videos are now circulating online despite police warnings.