கான்பூர் தெஹத் மாவட்டத்தின் ரசூலாபாத் பகுதியில், ஒரு ஆண் தனது 15 ஆண்டுகால மனைவியின் தவறான உறவை கண்டுபிடித்த பிறகு, அவளை அவளது காதலனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
மனைவி தனது முதல் கணவருடனான உறவை முறித்துக்கொண்டு எழுத்துப்பூர்வமான ஆவணத்தை வழங்கியுள்ளார்.பக்ஜா நிவாடா கிராமத்தின் தலைவர் ஜெய் சந்த் கூறுகையில், 48 வயதான யோகேஷ் திவாரி என்ற தொழிலாளி, அவுரங்க்பூரைச் சேர்ந்த கிரிபா சங்கர் மிஸ்ராவின் மகள் சோனி (45) என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், சோனி கன்னௌஜைச் சேர்ந்த விகாஸ் திவேதி (21) உடன் தவறான உறவு வைத்திருந்தார்," என்று ஜெய் சந்த் தெரிவித்தார்.

இந்த உறவு காரணமாக தம்பதியினரிடையே சண்டைகள் ஏற்பட்டன. சமீபத்தில் சோனி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். திங்கள்கிழமை அவர் கணவரின் வீட்டுக்கு திரும்பினார். அதே நாள் மதியம் கள்ளக்காதலன் விகாஸும் கிராமத்துக்கு வந்தார்.
அவரை கண்டதும் யோகேஷ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சார், என் மனைவி இன்னொருவருடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறாள். மனைவியின் கள்ளக்காதலன் இப்போது தான் எங்கள் வீட்டுக்குள் சென்றான். நீங்க சீக்கிரமா வாங்க.. என்று கெஞ்சினான்.

போலீஸ் விரைந்து வந்தது. மதிய வேளையில், தங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கும் ஒரு தகர கொட்டகையில் மனைவி சோனி மற்றும் அவளுடைய கள்ளக்காதலன் விகாஸ் இருவரும் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்து, அந்த தகர கொட்டகையின் வெளிப்பக்கமாக பூட்டினார் கணவர் யோகேஷ்.
மேலும், பெரிய தடி ஒன்றை எடுத்து, அந்த தகர கொட்டகையை பலமாக அடித்து சத்தம் எழுப்பி அக்கம் பக்கத்தினரை திரட்டினார். தகர கொட்டைகையின் கீழ் பகுதியில் ஒரு ஆள் புகுந்து வெளியே செல்லும் அளவுக்கு பெரிய துவாரம் இருந்துள்ளது. அதற்குள் புகுந்து வெளியே தப்ப முயன்றான் விகாஸ்.

ஆனால், சுற்றிலும் ஊர் மக்கள் கூடியிருந்தனர். இருந்தாலும், தப்பியோட முயற்சித்தான் யோகேஷ். அவனை கையும் களவுமாக பிடித்து நிறுத்தினர் ஊர் மக்கள். தனது மனைவி சோனி, கள்ளக்காதலன் விகாஸ் இருவரையும் வைத்து அங்கேயே ஒரு பஞ்சாயத்து கூட்டம் கூட்டப்பட்டது.
பஞ்சாயத்தில் இனிமேல் நான் என்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை சோனி உடன் நான் இனிமேல் சேர்ந்து வாழ மாட்டேன் என கூறினார் யோகேஷ். மேலும், குழந்தைகளையும் நானே வளர்த்துக் கொள்வேன் சோனியுடன் அனுப்ப மாட்டேன் என கூறினார்.

மிரண்டு போன சோனி பஞ்சாயத்து முன்னிலையில் கதறி அழுதார். ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவரை தெரிவதற்கு ஒப்புக்கொண்டார் அதன் பிறகு எழுத்துப்பூர்வமாக தன்னுடைய கணவர் யோகேஷை அவருடைய திருமண கடமைகளில் இருந்து விடுவித்தார் சோனி.

மேலும், சொத்திலும் எந்த பங்கும் கூற மாட்டேன் என்றும் எழுதி கொடுத்தார். அதன் பிறகு கணவர் யோகேஷ் அருகில் இருந்த கோயிலில் சோனி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் விகாஸ் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

மேலும் தன்னுடைய மகனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மனைவி சோனி கதறினார். ஊர் மக்களும் அவருடைய 12 வயது மகனை தாயுடன் செல்ல அனுமதித்தனர்.
இப்படி தன்னுடைய மனைவியின் திருட்டுத்தனத்தை நூதன முறையில் கண்டுபிடித்து அடுத்த சில நிமிடங்களில் தீர்ப்பையும் எழுதி முடித்த கணவரின் செயல் கவனத்தைப் பெற்று இருக்கிறது.


