பள்ளிக்கூட ஸ்டோர் ரூமில் ஹெட் மாஸ்டருடன் ஆசிரியை உடலுறவு.. வீடியோவில் அம்பலமான இன்னொரு உண்மை!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர், பள்ளியின் ஸ்டோர் ரூமில் பெண் ஊழியருடன் உடலுறவில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கான்கேர் மாவட்டம், இந்திரபிரஸ்தா கிராமத்தில் உள்ள பிவி 39 அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ராஜேஷ் பால். பள்ளி வளாகத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாக சந்தேகித்த கிராம மக்கள், ரகசியமாக வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்பினர்.

இதில், தலைமை ஆசிரியர் ராஜேஷ் பால் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை இருவரும் ஸ்டோர் ரூமில் உடலுறவில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மட்டுமில்லாமல், விசாரணையின் போது இன்னொரு உண்மையும் வெளியானது. அது என்னவென்றால், இந்த இரு ஆசிரியர்களும் விடுமுறை நாட்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதும், அலுவலக வேலை உள்ளது என இவர்கள் தினசரி பள்ளிக்கு வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு எச்சரித்தும், ராஜேஷ் பால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், வைரலான வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பாமல் இருக்க மூன்றாம் தரப்பினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், அதுசம்பந்தமான ஆடியோ கிளிப் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தன்குமாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் டி.ஆர்.சாஹு, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் ராஜேஷ் பாலை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Summary in English : In Chhattisgarh's Kanker district, headmaster Rajesh Pal was suspended after a viral video showed him engaging in illegal activity with a female staff member in the school storeroom. Villagers, suspecting misconduct even holidays, recorded and shared the footage, leading to an inquiry and his immediate suspension.