தேனி, டிசம்பர் 16, 2025 : தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் அருகே முத்தையன்செட்டிப்பட்டி பகுதியில் குடும்பத் தகராறு உச்சக்கட்டத்தை அடைந்து கொடூர இரட்டைக் கொலையாக வெடித்துள்ளது.
திருமணமாகி வெறும் 3 மாதங்களே ஆன இளம் பெண் நிகிலா (24) மற்றும் அவரது அண்ணன் விவேக் (33) ஆகியோரை கணவன் பிரதீப் (27) மற்றும் மாமனார் சிவக்குமார் (வயது 52) சேர்ந்து கத்தி, அறிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.

கொலையாளிகளான தந்தை-மகன் இருவரும் சம்பவத்திற்கு அடுத்த நாள் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சம்பவத்தின் பின்னணி:
முத்தையன்செட்டிப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் பிரதீப், அமமுக (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) கட்சியின் ஒன்றிய நிர்வாகி.
சின்னமனூர் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த நிகிலாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் பிரதீப்பின் நடத்தையே பிரச்சினையின் மூலம்.
பிரதீப் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்கம், அடிதடி உள்ளிட்ட வம்பு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மீது குறைந்தது 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், பிரதீப்பிற்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் தெரிகிறது. இதை நிகிலா கண்டித்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் நிகிலா தாய் வீட்டுக்குச் சென்றார்.
உறவினர்கள் சமரசம் செய்து சேர்த்துவைத்தனர். ஆனால் மீண்டும் சண்டை வெடித்து, பிரதீப் நிகிலாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிகிலா வரதட்சணை கொடுமை புகாரளித்தார்.
கொடூரம் நடந்தது எப்படி?
டிசம்பர் 11 அன்று, பஞ்சாயத்து முடிந்து திருமண சீதனப் பொருட்களை எடுத்துக்கொள்ள நிகிலா, அண்ணன் விவேக் (அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர், திருமணமானவர்) மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் புகுந்த வீட்டுக்கு வந்தார்.
அங்கு தகராறு வெடித்து கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த பிரதீப், விவேக்கை கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதைக் கண்ட நிகிலா மயங்கி விழுந்தார்.
அப்போது சிவக்குமார் அறிவாளால் வெட்டினார், இரத்தம் வந்து விடாமல், மருமகள் என்றும் பார்க்காமல் நிகிலாவை கத்தியால் குத்தி நிகிலாவைக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவியை பார்த்து ரசித்துள்ளான் கொடூர கணவன் பிரதீப்.
இருவரும் தப்பி ஓட முயன்றபோது, தந்தை-மகன் இருவரும் விரட்டி விரட்டி வெட்டி கொன்றனர். இதைக் கண்ட உறவினர்கள் தலைதெறிக்க ஓடினர். பின்னர் கொலையாளிகள் தப்பி ஓடினர்.
போலீஸ் நடவடிக்கை & சரண்:
தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் நடத்தினர்.
டிசம்பர் 12 அன்று சிவக்குமார் மற்றும் பிரதீப் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்றம் போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணைக்கு அனுமதித்தது.கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளனவா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இந்த கொடூர சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு உயிர்களைப் பலிகொள்ளும் அளவுக்கு சென்றது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Summary in English : In Theni district, Tamil Nadu, AMMK functionary Pradeep (27) and his father Sivakumar (52) brutally murdered Pradeep's wife Nikhila (24) and her brother Vivek (33) just three months after marriage. The double murder stemmed from domestic disputes over Pradeep's alleged extramarital affair and abusive behavior. The duo surrendered in court.
