நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

ஜெய்ப்பூர், நவம்பர் 20 : ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகிலுள்ள கோகுண்டா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கெலபவடி வனப்பகுதியில், ஒரு கொடூர கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு தாந்த்ரீகர், தன்னை அச்சுறுத்திய ஒரு தம்பதியரை - அவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருந்த போது - சூப்பர் க்ளூ (பெவிக்விக்) பசை ஊற்றி, பின்னர் கற்களால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தாந்த்ரீகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

கொல்லப்பட்டவர்கள் ராகுல் (வயது 30) மற்றும் சோனு (வயது 28). ராகுல் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டிருந்த போதிலும், அவர்களுக்கிடையே தவறான உறவு இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உதய்ப்பூர் மாவட்டத்தின் கோகுண்டா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்ற போது இருவரும் அறிமுகமாகினர். அந்த கோவில் வளாகத்தில் பல ஆண்டுகளாக தங்கியிருந்த தாந்த்ரீகர், இவர்களின் உறவை கண்டறிந்தார்.

ராகுலின் மனைவி, கணவருடன் அடிக்கடி ஏற்படும் சண்டைகள் காரணமாக தாந்த்ரீகரை அணுகி உதவி கோரினார். தாந்த்ரீகர், ராகுலின் தவறான உறவை அவரது மனைவியிடம் வெளிப்படுத்தினார்.

இதனால் கோபமடைந்த ராகுல் மற்றும் சோனு, தாந்த்ரீகரை திட்டி சண்டையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தாந்த்ரீகர், இருவரையும் கொல்ல திட்டமிட்டார்.

கொலை எப்படி நிகழ்ந்தது?

ராகுல், சோனு இருவரையும் அழைத்து உங்கள் இருவருக்கும் இனிமேல் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால், நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்றும் இதற்காக நீங்கள் எனக்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று கூறினார்.

இதனை நம்பிய ராகுலும், சோனுவும் பரிகார பூஜை செய்ய சம்மதம் தெரிவித்தனர். நவம்பர் 15 அன்று, தாந்த்ரீகர் ராகுலை தனது பைக்கில் அழைத்துச் சென்று கொலை இடத்திற்கு கொண்டு சென்றார். அங்கு சோனுவையும் வரவழைத்தார்.

பூஜை ஆரம்பம் ஆனது. நான் கண்களை கட்டிக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும், நான் கண்களை கட்டியபடியே உங்கள் மீது தீர்த்தம் தெளிப்பேன் என்றும் தாந்த்ரீகர் கூறியதை ஆளே இல்லாத காட்டுப்பகுதியில் இருவரும் உறவு கொள்ள ஆரம்பித்தனர்.

அப்போது, கண்களை மூடிக்கொள்ளுங்கள் நான் சொல்லும் வரை கண்ணை திறக்க கூடாது என்று ராகுல், சோனுவிடம் கூறிய தாந்த்ரீகர் தன்னுடைய கண் கட்டை அவிழ்த்து அவர்கள் இறுக்கமாக கட்டிப்பிடித்த நிலையில் இருக்கும் போது அவர்களுக்கு நடுவே தான் தயாராக வைத்திருந்த பெவிக்விக் பசையை ஊற்றினார்.

இதனால் அவர்கள் அசைய முடியாத நிலையில் சிக்கிக் கொண்டனர். இருவரின் மார்பு, தொடை மற்றும் கைகள் எல்லாம் ஒருவரின் உடலோடு ஒருவரின் உடல் இறுக்கமாக ஒட்டிக்கொண்டது.

பிரிக்க முயற்சித்தால் கடுமையான வலி, இரத்தம் வரும் அளவுக்கு காயம் ஏற்படுகிறது. எங்களை விட்டுவிடுங்கள் என்று இருவரும் கெஞ்சி கதற ஆரம்பித்தனர். ஆனால், தாந்திரீகர், அங்கிருந்த கற்களால் அடித்தும் கத்தியால் குத்தியும் இருவரையும் கொன்றார். ராகுல் உயிருடன் இருக்கும் போதே அவருடைய தனிப்பகுதி வெட்டப்பட்டிருந்ததாகவும், சோனுவின் தனிப்பகுதிக்குள் பெவிகுவிக் ஊற்றி ஒட்டப்பட்டிருந்தாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.

நவம்பர் 18 அன்று, வனப்பகுதியில் நிர்வாணமாகவும் உடல் சிதைக்கப்பட்ட நிலையிலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் சூப்பரிண்டெண்ட் விகாஸ் குமார் தலைமையிலான விசாரணையில், முதலில் இது கௌரவக் கொலை அல்லது காதல் விவகாரம் தொடர்பான பகைமை என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், விரிவான விசாரணையில் தாந்த்ரீகரின் பங்கு தெரியவந்தது.

போலீஸ் விசாரணை மற்றும் கைது

போலீஸ் அறிக்கையின்படி, தாந்த்ரீகர் கோவிலில் நீண்ட காலமாக தங்கியிருந்தவர். ராகுல் மற்றும் சோனு அவரை அச்சுறுத்தியதால், அவர்களை அழிக்க திட்டமிட்டார்.

சம்பவ இடத்தில் இருந்த சாட்சியங்கள் மற்றும் செல்போன் தகவல்கள் மூலம் தாந்த்ரீகர் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு, கொலை, சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் அதிகாரிகள், இதுபோன்ற மூடநம்பிக்கை சார்ந்த செயல்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Summary in English : In a gruesome murder in Jaipur, Rajasthan, a Tantrik was arrested for killing a couple engaged in an illicit affair. He lured teacher Rahul (30) and Sonu (28) to Kelabawdi forest on November 15, poured superglue on them during intercourse, then stabbed and stoned them to death. Mutilated bodies were discovered on November 18; motive was revenge for threats.