நெல்லூர் : திருப்பதி மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 40 வயதான விதவைப் பெண் ஒருவர், தனது சொந்த மகளுக்கு முன்னிலையில் மருமகனை திருமணம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. குற்றம்சாட்டப்பட்டவர் பி. வெங்கடம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது 17 வயது மகள் மற்றும் 20 வயதான மருமகன் எம். சரணுடன் வசித்து வந்தார்.

மகள், காதல் திருமணம் செய்து கொண்டு மூன்று மாதங்களே ஆகியுள்ளன. போலீசார் தெரிவிக்கையில், வெங்கடம்மா சமீபத்தில் சரணுடன் தகாத உறவு வைத்திருந்தார். கணவனுடன் தன்னுடைய தாய் ஆடையின்றி உல்லாசமாக இருந்ததை மகளே பார்த்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு, மகள் முன்னிலையில் அவரை திருமணம் செய்யவும் முயன்றார். மகள் எதிர்த்ததும், அவரை அரிவாள்மனை மற்றும் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. மகளின் கதறல் சத்தம் கேட்டு, வெங்கடம்மாவின் சகோதரர் பங்கரய்யா மற்றும் சகோதரி மாமா கல்பனா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எதிர்த்தனர்.
ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மூவரும் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் தலையிட்டு காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பங்கரய்யா அளித்த புகாரின் அடிப்படையில், கே.வி.பி. புரம் துணை ஆய்வாளர் ஜி. நரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் குடும்ப உறவு கருதி வழக்கை கைவிடுமாறு கோரிய போதிலும், பாதிக்கப்பட்ட மகள் சிறுமி என்பதால் போலீசார் இதுவரை முடிவெடுக்கவில்லை என்று துணை ஆய்வாளர் தெரிவித்தார்.
விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்டு காதலியின் தாயுடன் உடலுறவில் இருந்த சரண்..! மகளின் கணவர் என்றும் பாராமல், மகளுக்கே சக்களத்தியாக மாறிய தாய் வெங்கடம்மா..! இந்த கொடூர சம்பவத்தை பற்றி உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.


