“இப்படி ஒரே ஒரு ஆசிரியர் இருந்தா எல்லோரும் பாஸ் ஆகிடலாம்..” ரீல்ஸ் மோகத்தில் ஆசிரியை செய்த செயலால் அதிர்ச்சி..!

பாட்னா : பிகார் மாநிலத்தில் பட்லிபுத்ரா பல்கலைக்கழக (PPU) தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் ஆசிரியை, விடையை சரியாக படிக்காமலேயே மதிப்பெண் போட்டு, அதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவாக எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், ஆசிரியை மற்ற திருத்துநர்களுடன் அமர்ந்திருக்கும் நிலையில், விடைத்தாளை சரியாக பார்க்காமல் விரைவாக டிக் மார்க் போட்டு மதிப்பெண் வழங்குவது தெளிவாக தெரிகிறது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டு வைரலானதைத் தொடர்ந்து, X (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனால் ஆசிரியை மீது FIR பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால் எல்லா மாணவர்களும் எளிதாக பாஸ் ஆகிடலாம்", "மாணவர்களின் கடின உழைப்பை இப்படி அலட்சியப்படுத்துவதா?", "கல்வி முறையின் உண்மை முகம் இதுதானா?" என கிண்டலடித்தும், கோபப்பட்டும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

சிலர், "ரீல்ஸ் ஆசைக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்களா?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பிகார் கல்வி முறையின் தரம் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Summary in English : A female teacher in Bihar was caught on viral Instagram reels casually marking Patliputra University exam answer sheets without properly checking them, sparking outrage online. Netizens mocked that with such evaluation, every student could easily pass, while an FIR was filed against her.