பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது பெயரில் வெளியான போலி (மார்ஃபிங்) அந்தரங்க வீடியோ குறித்து தைரியமாக வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பான அவரது பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'வம்சம்', 'வாணி ராணி', 'மரகத வீணை', 'ஆண்டாள் அழகர்' உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, தற்போது விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான 'பாக்கியலட்சுமி'யில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திரைத்துறையிலும் கால் பதித்த ரேஷ்மா, இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு' வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கிய விவாதத்தில் கலந்து கொண்ட ரேஷ்மா, தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது: "எனது சகோதரி திடீரென போன் செய்து, எனது செக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளதாக கூறினார். அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். எனக்கு ஆளே இல்லை, அப்படி இருக்கும்போது எப்படி வீடியோ வெளியாகும்? என்று கேட்டு, முதலில் அந்த வீடியோவை எனக்கு அனுப்பச் சொன்னேன்.
எனது அம்மா, சகோதரியிடம் அதை கேட்கச் சொல்லி இருக்கிறார். பின்னர் பார்த்த போது, அது முழுக்க முழுக்க மார்ஃபிங் செய்யப்பட்ட போலி வீடியோ என்று தெரிந்தது. அதை குடும்பத்தினருக்கு புரிய வைத்தேன்.எனது அப்பா தயாரிப்பாளர், சகோதரர் நடிகர்.
எங்கள் குடும்பம் முழுக்க சினிமா பின்னணி கொண்டது. அதனால் என்ன சொன்னதை அவர்கள் உடனே புரிந்து கொண்டார்கள். ஆனால், திரைத்துறை பின்னணி இல்லாத சாதாரண பெண்ணுக்கு இது நடந்திருந்தால், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்.
ஏன், தற்கொலை வரை சென்றிருக்கலாம். எனது குடும்பம் இதை அவ்வளவு அருமையாக கையாண்டது பெருமைக்குரியது."ரேஷ்மாவின் இந்த தைரியமான பேச்சு, சைபர் கிரைம் மற்றும் போலி வீடியோக்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Summary : Popular Tamil actress Reshma Pasupuleti openly discussed a morphed intimate video falsely attributed to her. While in America, her family informed her about it; she clarified it was fake. Praising her cinema-background family's supportive response, she highlighted how ordinary women might suffer severe mental trauma or even suicide from such cybercrimes.

