லண்டன் : இங்கிலாந்தின் வெஸ்ட் யார்க்ஷயரில் உள்ள HMP வெதர்பி (Weatherby) ஆண்கள் சிறையில் பணியாற்றிய பெண் சிறை அதிகாரி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருடன் பலமுறை தகாத உறவில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகிய நிலையில், விசாரணையில் போதைப்பொருள் கடத்தியதும் உறுதியானதால், அந்த அதிகாரிக்கு லீட்ஸ் கிரவுன் கோர்ட் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் 29 வயதான மேகன் கிப்சன் (Megan Gibson). இவர் வெதர்பி சிறையில் பணியாற்றிய காலகட்டத்தில், அங்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஒரு கைதியுடன் நெருக்கமாகப் பழகியதாகக் கூறப்படுகிறது.
சிறையின் உயர்பாதுகாப்பு அமைப்பு இருந்தபோதிலும், இருவரும் பலமுறை உடலுறவில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிசிடிவி காட்சிகள், சக ஊழியர்களின் சாட்சியங்கள் மற்றும் செல்போன் தகவல்கள் மூலம் கிடைத்ததாக தெரிகிறது.
விசாரணையின்போது தெரியவந்த அதிர்ச்சி தகவல்
மேகன் கிப்சன் அந்த கைதிக்கு சிறைக்குள் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை ரகசியமாக வழங்கியிருக்கிறார். இதற்காக அவர் கைதியிடமிருந்து பணம் மற்றும் பரிசுகளை பெற்றதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேகன் கிப்சன், “Misconduct in Public Office” (பொது பணியில் தவறான நடத்தை) மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். கைதியுடன் உறவு கொண்டீர்கள். எதற்காக, போதை பொருளை சிறைக்குள் கடத்தி சென்று கைதியிடம் கொடுத்தீர்கள் என்று கேட்ட போது கிப்சன் அப்போது தான் அவன் என்னுடன் உல்லாசமாக இருக்க ஒப்புக்கொல்வான் என்று வினோதனமான காரணம் ஒன்றை கூறி அதிர வைத்தார்.
இதையடுத்து நீதிபதி, “சிறை அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர் இவ்வளவு மோசமான முறையில் நம்பிக்கையைத் துரோகம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது சிறைத்துறையின் ஒழுங்கு முறையையே கேள்விக்குள்ளாக்குகிறது” என்று கருத்து தெரிவித்தார்.
தீர்ப்பு வழங்கப்பட்டதும் மேகன் கிப்சன் உடனடியாக காவலில் எடுக்கப்பட்டார். அவர் இப்போது பெண்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக உள்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இங்கிலாந்து சிறைகளில் பெண் அதிகாரிகளுக்கும் ஆண் கைதிகளுக்கும் இடையிலான தகாத உறவு தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு முன்பு HMP பெர்விக் மற்றும் HMP வாண்ட்ஸ்வொர்த் சிறைகளிலும் இதேபோன்ற பல வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மேகன் கிப்சன் வழக்கு, சிறைத்துறையில் பாலின சமநிலை, பயிற்சி மற்றும் கண்காணிப்பு முறை குறித்து மீண்டும் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
Summary : Former UK prison officer Megan Gibson, 29, has been jailed for one year after admitting to repeated physical relationships with an inmate at HMP Wealstun (Weatherby) and smuggling drugs inside the jail. Over 100 complaints and CCTV evidence led to her conviction at Leeds Crown Court.

