மார்பின் மீது அதை தடவிக்கொண்டு காதலனுடன் தாய் செய்த அசிங்கம்! நேரில் பார்த்த மகள்கள்! இறுதியில் அரங்கேறிய கொடூரம்!

உத்தர கன்னடா மாவட்டம், சித்தாபுரா தாலுகா, அவரகுப்பா கிராமத்தில் கள்ளக்காதல் தொடர்பான தகராறு கொலை வெறியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். பிரபல ஜோதிடர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகேஷ் நாயக் (37/38 வயது) என்பவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். இவரது மனைவி சுஜித்ரா (சுசித்ரா நாயக் - 36 வயது) மற்றும் இரு மகள்கள் (17 மற்றும் 14 வயது) சொந்த ஊரான சித்தாபுரா பகுதியில் வசித்து வந்தனர். மகேஷ் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருபவர்.

குடும்பத்தில் கடன் பிரச்சனை இருந்ததால், சுஜித்ரா பிரபல ஜோதிடரான கமல்கார் பட் (கமலகர் பட் குருஜி - 48 வயது) என்பவரிடம் ஆலோசனைக்காகச் சென்றுள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் தோன்றும் இவர், ஷிவமொக்தாவில் ஜோதிட அலுவலகம் நடத்தி வருபவர். ஜோதிடர் 48 நாட்கள் தொடர் பூஜை செய்யுமாறு அறிவுறுத்தியதால், சுஜித்ரா தினமும் அவரது அலுவலகத்திற்குச் சென்று வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இதையடுத்து சுஜித்ரா தனது கணவரைப் புறக்கணித்து, ஜோதிடருடன் நெருங்கி இருந்து வந்துள்ளார். ஜோதிடர் அடிக்கடி சுஜித்ராவின் வீட்டிற்குச் சென்று தங்குவதும் வழக்கமாகியது.

சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த மகள்கள், தாயும் ஜோதிடரும் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தாய் தன்னுடைய மார்பில் தேனை தடவிக்கொண்டு, ஜோதிடருடன் கன்றாவியான கோலத்தில் இருந்துள்ளார். மகள்கள் இதை பார்த்து அழ தொடங்கியுள்ளனர். இது பரிகாரம் என்றும், குடும்ப நன்மைக்கு என்று மகள்களை ஏமாற்ற முயற்சி செய்துள்ளார்.

ஆனால், தாயின் தவறான உறவால் மன உளைச்சலுக்கு ஆளான மகள்கள், தந்தை மகேஷ் நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “அப்பா நீங்க வந்து எங்களை கூட்டிட்டு போங்க... இல்லைனா நாங்க தற்கொலை பண்ணிக்குவோம்... அம்மா தப்பு தப்பா என்னென்னமோ பண்றாங்க.. இவங்க பண்றது எங்களுக்கு பிடிக்கல” என அழுதபடி கூறியுள்ளனர்.

இதையடுத்து மகேஷ், மகள்களை தனது சகோதரர் வசந்த் நாயக் வீட்டிற்கு செல்லுமாறும், அங்கு வந்து உங்களை அழைத்து செல்கிறேன் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மகள்கள் அங்கு சென்றனர்.

இதை அறிந்த சுஜித்ராவும் ஜோதிடரும், உறவு வெளியே தெரிந்துவிடுமோ என அச்சமடைந்தனர். எனவே ஜோதிடர் தனது ஆட்களுடன் (அடியாட்கள்) வசந்த் நாயக் வீட்டிற்குச் சென்று மகள்களை அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

இதற்கிடையே மகேஷ் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். தகராறு வலுக்கவே, ஜோதிடர் கமல்கார் பட், சுஜித்ரா, அவரது தந்தை லோகநாத் நாயக் மற்றும் மற்ற ஆட்கள் (ஆகாஷ், முகமது முபுஸ், பைசல், இர்பான் உள்ளிட்டோர்) கத்தி, கூர்மையான ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலின்போது மகேஷை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரர் வசந்த் நாயக் (41/43 வயது) சரமாரியாக குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகேஷ் நாயக் மற்றும் அவர்களது அண்டைவீட்டார் குமார் நாராயண நாயக் (35) ஆகியோரும் குத்து காயங்களுடன் தீவிரமாக காயமடைந்தனர். இருவரும் ஷிவமொகா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகேஷின் மூத்த மகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுஜித்ரா, கமல்கார் பட் உட்பட ஏழு பேரை கைது செய்தனர். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கைதிகளும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் சித்தாபுரா பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சனைக்காக ஜோதிடரை அணுகிய பெண், அவருடன் கள்ள உறவில் ஈடுபட்டு, இறுதியில் கணவரின் சகோதரரை கொலை செய்யும் அளவுக்கு விஷயம் முற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : In a family dispute in Uttar Kannada's Siddapur, a woman's extramarital relationship with an astrologer led to a violent confrontation. Her husband and his brother were seriously injured in the clash, and one person lost his life. Seven individuals, including the woman and the astrologer, were arrested.