வினோதமான முறையில் உடலுறவு! 20 நாள் கழித்து சிக்கிய மனைவி! குலை நடுங்க வைக்கும் கொடூரம்!

கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம், ஹெப்பூர் கிராமத்தில் அமைதியான ஒரு வீட்டில், ஜனவரி 29, 2026 இரவு ஒரு கொடூரமான திட்டம் நிறைவேறியது.

பரமேஷ் (வயது 50), தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தவர். அவரது மனைவி ஆஷா (46), வீட்டு வேலைக்காரியாக பணியாற்றுபவர். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள். கடந்த 10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடந்து வந்தாலும், ஆஷாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சமையல்காரர் சந்திரப்பா (48) உடன் கள்ள உறவு ஏற்பட்டிருந்தது.

பரமேஷுக்கு இந்த உறவு தெரிய வந்தது. அது ஆஷாவுக்கும் சந்திரப்பாவுக்கும் பெரிய தடையாக மாறியது. "இவர் இருந்தால் எங்களால் சுதந்திரமாக வாழ முடியாது" என்ற எண்ணம் அவர்களை ஆட்கொண்டது. கணவனை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஜனவரி 29 அன்று, ஆஷா தன் இரு குழந்தைகளையும் தன் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். இரவு பரமேஷ் வழக்கம்போல் மது அருந்தி ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார். ஆஷா அவருக்கு பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்திருந்தாள் – அது அவரை இன்னும் ஆழமாக தூங்க வைத்தது.

நள்ளிரவு 2 மணியளவில், ஆஷா சந்திரப்பாவை வீட்டுக்கு அழைத்தாள். இருவரும் சேர்ந்து திட்டமிட்டபடி செயல்பட்டனர். பரமேஷின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினர். கழுத்தை நெருக்கினர். மூச்சுத் திணறடித்து, அவர் போராடியபோதும், இருவரும் விடவில்லை. சில நிமிடங்களில் பரமேஷின் உயிர் பிரிந்தது.

கொலையை மறைக்க, அவர்கள் சடலத்தை படுக்கையில் போட்டு, அறையை சீரமைத்தனர். பின்னர், கணவரின் சடலத்தை அருகில் வைத்துக்கொண்டு ஆஷாவும், சந்திரப்பாவும் உடலுறவு கொண்டனர். கணவரின் சடலம் அருகில் கிடக்க கள்ளக்காதலன் சந்திரப்பாவுடன் உடலுறவை கொண்டாட துவங்கிய ஆஷாவின் நடவடிக்கை நிச்சயம் விநோதமானது தான். விஷயங்கள் முடிந்த பின் கள்ளக்காதலனை வழி அனுப்பி வைத்தாள் ஆஷா. 

அதன் பிறகு, தன்னுடைய நாடகத்தை தொடங்கினாள். திடீரென நெஞ்சு வலி என்று கத்தியதாகவும், அவர் சுருண்டு விழுந்து மயங்கியதாகவும் சொல்லி, தாய் கமலா மற்றும் தம்பி விக்னேஷிடம் போன் செய்தாள்.

"அத்தான் திடீரென மயக்கம் போட்டு விழுந்துட்டாரு... வேகமா வாங்க!" என்று அழுதபடி கூப்பிட்டாள்.

கமலாவும் விக்னேஷும் ஓடிவந்து பார்த்தபோது, பரமேஷ் பேச்சும் மூச்சும் இல்லாமல் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள், "ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்" என்று தெரிவித்தனர்.

ஆஷா கண்ணீருடன் கதறினாள்: "சாயங்காலம் ரூம்ல உக்காந்திருந்தார்... திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு கத்தினார்... என்ன என்னுன்னு பாக்குறதுக்குள்ள சுருண்டு விழுந்துட்டார்..."

ஆனால், விக்னேஷுக்கு இது நம்பகமாக தெரியவில்லை. "ஏதோ மர்மம் இருக்கு" என்ற சந்தேகம் அவரை வாட்டியது. போஸ்ட்மார்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.

ஆஷா உடனே எதிர்த்தாள்: "டாக்டர்கள் இறந்துட்டார்னு சொல்லிட்டாங்களே... உடலை கூறு போட வேண்டாம்... என்னால் தாங்க முடியாது!" என்று சென்டிமெண்ட்டாக அழுதாள்.

ஆனால் விக்னேஷின் சந்தேகம் வலுத்தது. இறுதியாக அடக்கம் செய்தாலும், அவர் மனதில் சந்தேகம் தீரவில்லை.

பின்னர் அதிர்ச்சி: பரமேஷ் இறந்து வெறும் 20 நாட்களிலேயே – பிப்ரவரி 19 அன்று – ஆஷா சந்திரப்பாவை மறுமணம் செய்து கொண்டாள்! இது வினோதத்திலும் வினோதம்.

ஒரு வருடம் ஆகட்டும், ஆறு மாதங்கள் ஆகட்டும் என்று கூட அவள் காத்திருக்கவில்லை. கணவர் இறந்து 30-வது நாள் சடங்கு செய்வதற்குள் இன்னொருவருடன் திருமணம். 

இது மொத்த ஊரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. "இது சாதாரணமா? ஏதோ தவறு நடந்திருக்கு!" என்று தாய் கமலாவும் விக்னேஷும் முடிவு செய்தனர்.

அவர்கள் உறவினர்களுடன் சேர்ந்து ஹெப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். "அண்ணன் மரணத்தில் சந்தேகம் இருக்கு" என்றனர்.

போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். ஆஷாவை விசாரித்தபோது அவள் முகத்தில் வியர்வை வழிந்தது. உச்சந்தலையிலிருந்து கால் வரை நடுங்கியது.

பரமேஷின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். ரிப்போர்ட் அதிர்ச்சி தருவதாக இருந்தது: மாரடைப்பு இல்லை – முகத்தில் தலையணை அழுத்தப்பட்டு மூச்சுத்திணறடித்து கொலை செய்யப்பட்டிருந்தது!

விசாரணையில் ஆஷாவும் சந்திரப்பாவும் உண்மையை ஒப்புக்கொண்டனர். தூக்க மாத்திரை கலந்த பால் கொடுத்து தூங்க வைத்து, நள்ளிரவில் தலையணையால் அமுக்கி கொன்றதாகவும், மாரடைப்பு என்று நாடகமாடியதாகவும் தெரிவித்தனர்.

இருவரும் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்று அந்த இரு குழந்தைகள் தாயும் தந்தையும் இல்லாமல் தவிக்கின்றன. ஒரு கள்ளக் காதலுக்காக உயிர் பறிக்கப்பட்ட கதை, குடும்பத்தின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிட்டது.

Summary : In Tumkur district, Karnataka, a man passed away suddenly at home. His wife reported chest pain as the cause. Family doubts led to police inquiry and postmortem. It revealed suspicious circumstances. The wife remarried quickly afterward. Investigations followed, leading to legal action against her and an associate.