துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்..+2 மாணவிக்கு நடந்த கொடூரம்..! என்ன நடக்குது தமிழ்நாட்டில்! பகீர் காட்சி!

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி சுப்புராஜ் என்பவரது மகள் (வயது 17), குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

நேற்று (மார்ச் 10) 12ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதிவிட்டு மதியம் வீடு திரும்பிய அவர், மாலை சுமார் 6 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். (சில தகவல்களின்படி இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது).

இரவு நெடுநேரமாகியும் திரும்பாததால், தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றார். அங்கு பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதன்பேரில் இன்று (மார்ச் 11) காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடல் பகுதிகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட காயங்களுடன் மாணவியின் சடலம் மீட்கப்பட்டது. ஆடைகள் களையப்பட்ட நிலையில் சடலம் கிடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். மாணவியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் நிலைமையைப் பார்க்கும்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பவத்தை அடுத்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குளத்தூர் - குறுக்குச்சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் ஆறுதல் தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த கொடூர சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி(கள்) விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Summary : A 17-year-old girl from Vedanatham village, Thoothukudi district, went missing after returning from her Class 12 public exam on March 10. Her body was found the next evening in a nearby forested area. Police registered a case and are investigating the incident. Local people protested demanding quick action.