வசமாக சிக்கிய கைக்கூலிகள்! ஓட்டு போட்டா கிட்னி அவுட்! கொதிக்கும் மக்கள்!

திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தனலட்சுமி சீனிவாசா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உரிமையாளர் சீனிவாசனின் மகன் திரு. கதிரவன் அவர்களுக்கு எதிராக தொகுதி திமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கிட்னி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இந்த மருத்துவமனையின் உரிமையாளரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், “மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?” என தொகுதி பொறுப்பாளர்கள் நேரடியாக மாவட்ட திமுக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில், திமுக பொறுப்பாளர்கள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த திரு. கதிரவன், தனது தந்தையின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களை நேரடியாக வாக்கு சேகரிப்பு பணியில் இறக்கியுள்ளார். தொகுதியின் திமுக அதிகாரப்பூர்வ பொறுப்பாளர்களை முழுமையாக தாண்டி, அவர் நியமித்த ஊழியர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை கண்ட அந்தப் பகுதி மக்கள், இரண்டு ஊழியர்களை சிறைபிடித்து விசாரித்தபோது, “இவர்கள் திமுக கட்சியினர் அல்ல; சம்பளத்துக்கு வேலை செய்யும் நிறுவன ஊழியர்கள்” என தெரியவந்தது. வாக்கு சேகரிப்பு என்ற பெயரில் இந்த ஊழியர்கள் ஒவ்வொரு வாக்காளரிடமும் ஆதார் கார்டு நகலை வாங்கி வருவதாகவும், இது பணம் பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடு என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தமிழக தேர்தல் களத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்சியினரே கைவிட்ட ஒரு வேட்பாளர், கிட்னி முறைகேடு விவகாரத்தில் உலகப் புகழ் பெற்ற நிலையில், தனது நிறுவன ஊழியர்களை மட்டுமே நம்பி வாக்கு சேகரிப்பு நடத்துவது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனிடையே, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

“இவரை நம்பி நீங்கள் வாக்கு செலுத்தினால் உங்களுடைய கிட்னியை வெளிநாட்டுக்கு விற்று விடுவார். உங்களை ஒரு நாய் போல அவருடைய வீட்டின் பின்னால் கட்டி போட்டு விடுவார்.”

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

திமுகவின் உள் நடவடிக்கை என்ன? மாவட்ட தலைமை இந்த எதிர்ப்பை எப்படி கையாளப் போகிறது? மருத்துவமனை ஊழியர்களை வாக்கு சேகரிப்பில் பயன்படுத்துவது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டதா? ஆதார் கார்டு நகல்கள் சேகரிப்பின் உண்மையான நோக்கம் என்ன? – இந்தக் கேள்விகள் தற்போது தொகுதி முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

Summary in English : In Mannachanallur constituency, DMK candidate Kathiravan, son of a medical college owner facing kidney-related allegations, is contesting elections. Local DMK officials refused to campaign for him due to the controversy. He deployed hospital staff for voter outreach, leading to public concerns over Aadhaar card collection.