வாண்டடாக வண்டியில் ஏறிய பிரேமலதா! ஆதாரத்தை வெளியிட்டு தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட கொடுமை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவை “அரை சதவீதம் மட்டுமே வாக்கு பெற்ற கட்சி” என்றும், “ஐசியூவில் இருந்த கட்சிக்கு உயிர் கொடுத்தது அதிமுக தான்” என்றும் விமர்சித்திருந்தார்.

மேலும், தேமுதிக தொண்டர்கள் அதிமுக கூட்டணியை ஆதரித்தாலும், கட்சித் தலைமை திமுகவுடன் கூட்டணி அமைத்தது தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரேமலதா, “எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தார். 2024 மக்களவைத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு 5 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா (நாடாளுமன்ற உறுப்பினர்) இடம் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

ஆனால், எந்த ஆண்டு ராஜ்யசபா சீட் கொடுப்பது என்று குறிப்பிடப்படவில்லை. நான் அப்போதே கேட்டபோது, ‘இது எம்ஜிஆர் காலத்திலிருந்து இருக்கும் நடைமுறை. நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும்’ என்று உறுதியளித்தார். ஆனால், எங்களை ஏமாற்றினார்” என்று கூறினார்.

இங்கே, எடப்பாடி பழனிசாமி 2025ஆம் ஆண்டு தேமுதிகவுக்கு 2026ல் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக பொதுவெளியில் அறிவித்ததை யாரும் மறுக்கமுடியாது.

இருப்பினும், அதற்குள் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, தனது கூட்டணி முடிவை ஜனவரியில் அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தது. பின்னர் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்து 10 தொகுதிகளைப் பெற்றுள்ளது.

மேலும், “எங்கள் கட்சியை ஐசியூவில் இருந்த கட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மே 4ம் தேதி தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர் ஐசியூவில் சேரக்கூடாது என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என்ற பிரேமலதாவின் பேச்சு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சியுடன் செய்த ஒப்பந்தத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்துவது அரசியல் அழகுக்கு உகந்ததல்ல என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, எந்த வருடம் ராஜ்யசபா சீட் கொடுப்பேன் என எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்பது பிரேமலதா வாயில் இருந்தே வந்துவிட்டது. இப்படி, எடப்பாடி பழனிசாமியை அம்பலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு பிரேமலதா தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டிருப்பது கொடுமை. கூட்டணி மாற்றங்கள் அரசியலில் இயல்பானவை என்றாலும், தனிப்பட்ட ஒப்பந்த விவரங்களை வெளியிடுவது புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், பிரேமலதாவின் குற்றச்சாட்டுக்கு அடுத்த பிரச்சார கூட்டத்தில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வார்த்தைப் போர் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தை இன்னும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

Summary in English : DMK-TDMK alliance draws sharp response from AIADMK leader Edappadi Palaniswami, who earlier criticized TDMK as a low-vote party revived by AIADMK.

Premalatha Vijayakanth countered that Palaniswami failed to honor a seat-sharing agreement signed for 2024 elections, including a Rajya Sabha seat promise. She noted the agreement lacked a specific year for the seat. Palaniswami had publicly offered the seat for 2026.