ஒரே ஒரு முறை உடலுறவு, கர்ப்பமான மாணவி! காதலன் கண்றாவி பதில்! நடுங்க வைத்த தந்தையின் வாக்குமூலம்!

கொல்கத்தாவின் அமைதியான ஒரு புறநகர் பகுதியில், ஒரு சாதாரண குடும்பத்தின் வாழ்க்கை இருண்ட கொடூரத்தால் முழுமையாக தலைகீழாக மாறியது. இந்தச் சம்பவம் சினிமாவில் கூட வராத அளவுக்கு கொடூரமானது.

அனுஷா என்ற 16 வயது மாணவி, பதினோராம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பள்ளிக்கு அருகில் வசித்த 21 வயது இளைஞன் விக்ரம். இருவருக்கும் இடையே முதலில் நட்பு, பின்னர் காதல். அந்த உறவு உடல் ரீதியாகவும் நீண்டது.

ஒரு நாள் திடீரென அனுஷாவுக்கு கடுமையான வயிற்று வலி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அதிர்ச்சி தகவல் வெளியானது — அவள் ஆறு மாதங்களுக்கு முன்புதான் பூப்படைந்திருந்தாள். ஆனால், அவள் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தாள். பெற்றோர்கள் உலகமே சுழன்றது.

வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விக்ரம் திடீரென காணாமல் போனான்.

விக்ரம் தன் பெற்றோரை இழந்தவன். அக்காவின் பாதுகாப்பில் வளர்ந்தான். அக்கா தன்னுடைய கணவருடன் சேர்ந்து தம்பிக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நல்ல பெண்ணுடன் நிச்சயதார்த்தம் பேச்சு முடிந்து, இருவரும் திரும்பி வந்துகொண்டிருந்தபோது விக்ரமுக்கு ஒரு போன் அழைப்பு. “முக்கிய வேலை, வீட்டுக்கு வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு இடையில் இறங்கி மறைந்தான்.

அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை.

காவல்துறை விசாரணையில் உண்மை வெளியானது. அனுஷாவின் தந்தை ராமசாமி, இறைச்சி கடை நடத்தி வந்தவர். தன் மகளை ஏமாற்றியவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதை அறிந்து கொண்டார்.

ராமசாமி விக்ரமை போனில் தொடர்பு கொண்டபோது:

“நான் உன் மகளுடன் ஒரே ஒரு முறைதான் உறவு வைத்தேன். கர்ப்பத்துக்கு நான் பொறுப்பல்ல. நான் வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது.”

இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் ராமசாமி. இதனை மகள் அனுஷாவிடம் கூறினாள். விரக்தியின் உச்சிக்கு சென்றாள் அனுஷா. உடனே விக்ரமை தொலைபேசியில் தொடர்பு கொண்டாள், விக்ரம், நீ வேறு பெண்ணை திருமணம் செய்துகொள், எனக்கு கவலை இல்லை, கடைசி முறையாக ஒரு இரவு சந்திக்க வேண்டும் என்று காதல் ரசம் சொட்ட பேசினாள். “வீட்டில் தனியாக இருக்கிறேன்” அப்பா, அம்மா எல்லாரும் பாட்டி வீட்டுக்கு போயிட்டாங்க என்று அழைத்தாள்.

இரவு நேரத்தில் விக்ரம் அந்த வீட்டிற்கு வந்தான்.

அங்கே காத்திருந்தது நரகம்.

அனுஷாவின் பெற்றோர்கள் பாட்டி வீட்டுக்கு செல்லவில்லை. மகளிடம் சொல்லி விக்ரமை தனியாக வரவளைத்து ராமசாமியின் திட்டம். அவனை கையும் களவுமாகப் பிடித்தனர். கடுமையான தாக்குதல். கடப்பாறை விக்ரமின் உடலை பல இடங்களில் பதம் பார்த்தது. சரிந்து விழுந்தான் விக்ரம்.

அப்போதும் கூட கோபத்தில் கொந்தளித்த ராமசாமி, தன் இறைச்சி கடையில் பயன்படுத்தும் கூர்மையான கத்தியையும், இறைச்சி வெட்டும் கட்டையையும் எடுத்தார். ஒரே ஒரு முறை தான் உறவு வச்சிகிட்டேன்.. குழந்தைக்கு பொறுப்பேற்க முடியாதுன்னா சொன்ன.. என்று ஆக்ரோஷமாக கத்தியபடி விக்ரமின் உடலை துண்டு துண்டாக வெட்டினார். கறி வெட்டும் மரக்கட்டையில் வைத்து சிதைத்தார் விக்ரமின் ஒவ்வொரு உறுப்பையும்.

பின்னர் அந்த துண்டு துண்டான உடல் பாகங்களை வீட்டுக்கு அருகில் இருந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் வீசினார்.

முழு சம்பவமும் கொல்கத்தா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு தந்தையின் கோபம் எந்த அளவுக்கு கொடூரமாக மாறும் என்பதற்கு இந்தச் சம்பவம் உதாரணமாகிவிட்டது.

காவல்துறை இப்போது ராமசாமியை கைது செய்து விசாரித்து வருகிறது. அனுஷாவுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, அவள் மனநிலை கண்காணிக்கப்படுகிறது.

ஒரு காதல் என்ற பெயரில் தொடங்கிய உறவு, இறுதியில் இரத்தம் தோய்ந்த கொடூரக் கதையாக முடிந்தது.

இது உண்மை சம்பவத்தை கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மற்றும் இடம் கற்பனை.

Summary in English : A girl formed a close relationship with a 21-year-old neighbour. She later discovered she was pregnant. The young man planned to marry another woman. He visited her house one night following her call. He was not seen afterwards. His remains were later found inside a 300-foot deep borewell near the house.