சத்தீஸ்கரில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் 20 வயதான கல்லூரி மாணவி அனிதா (பெயர் மாற்றப்பட்டது) தனது அழகைப் பராமரிக்கும் வாடிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்கு அடிக்கடி சென்று வந்தார்.
அங்கு பணியாற்றி வந்த 36 வயதான ரேணுகா (பெயர் மாற்றப்பட்டது) அவருடன் நட்பு ஏற்படுத்தினார்.
ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நல்ல தோழமை உருவானது. அனிதா தனது தோழியின் அன்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் பின்னர் அந்த நட்பு தவறான திசையில் செல்லத் தொடங்கியது.

ரேணுகா தவறான நோக்கத்துடன் நடந்துகொள்வதை உணர்ந்த அனிதா, அவரைத் தவிர்க்க முயன்றார். இதனால் கோபமடைந்த ரேணுகா, இருவரும் தனியாக இருந்தபோது எடுக்கப்பட்ட தனிப்பட்ட புகைப்படங்களைக் காட்டி மிரட்டத் தொடங்கினார்.
பயந்துபோன அனிதா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தி ரேணுகாவை கைது செய்தனர். விசாரணையின் போது ரேணுகாவின் கைப்பேசியில் பல பெண்களுடன் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் படங்கள் இருப்பது தெரியவந்தது.
அந்த அழகு நிலையத்திற்கு வரும் பல பெண்களிடமும் இதுபோன்ற தவறான நடத்தை இருந்ததாக தகவல்கள் வெளியாயின.
இதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரேணுகா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிற பெண்களை விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின. நாங்கள் விரும்பித்தான் ரேணுகா மேடமுடன் உல்லாசமாக இருந்தோம். அவர் எங்களை கட்டாயப்படுத்தவில்லை. இது எங்கள் தனிப்பட்ட உரிமை. அனிதாவுடம் விரும்பித்தான் ரேணுகா மேடமும் ஓரினச்சேர்க்கையில் இருந்தால். ஆனால், ஒரு கட்டத்தில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், ரேணுகா மேடம் கொடுக்க மறுத்ததால் இந்த புகாரை அளித்ததாகவும்” கூறினர்.
அனிதாவும் ரேணுகாவுடன் தொடர்பில் இருந்ததாகவும், பணம் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ரேணுகா தரப்பில் அனிதா பணம் கேட்டு மிரட்டியதற்க்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து காவல்துறையினர் அனிதாவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் முழு சத்தீஸ்கர் மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெண்களிடையே உருவாகும் நட்புகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்ற பாடத்தை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்கள் வெளியானவுடன் பகிர்வோம்.
English Summary : In Chhattisgarh, a 20-year-old college student who regularly visited a beauty parlor befriended a 36-year-old employee there. Their relationship faced complications involving private images. The student filed a police complaint, leading to the employee's arrest. Further inquiry revealed mutual financial claims, resulting in the student's arrest as well. The case has caused concern in the state.