இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2023 சனிக்கிழமை. இதில் அனைத்து விதமான நன்மைகளையும்  வாழ்க்கையில் அனைத்தையும் பெறுவதற்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்வதை நாம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக குல தெய்வ வழிபாடு செய்வதின் மூலம் நமக்கு ஏற்படும் தீமைகளில் இருந்து விளக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.

எனவே உங்களுக்கு ஏற்படுகின்ற துயரங்களுக்கு முக்கிய காரணம் என்ன உங்கள் கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் செய்திருக்கின்ற பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப நன்மைகள் கிடைக்கும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள ஜாதகத்தை நீங்கள் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று உங்களுக்கு வளர்ச்சிக்கு ஏற்ற நாளாக உள்ளது. உங்கள் திறமைகளை எளிதாக நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். இன்றைய தினத்தில் முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுப்பதின் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை மகிழ்ச்சியோடு பணியாற்றுவீர்கள். சக பணியாளர்களிடம் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். எனவே தொழில் அமோகமாக நடக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நிதி வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. இன்று பணம் போதுமான அளவு உங்களிடைய இருப்பதால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

---- Advertisement ----

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்கள் தைரியம் அதிகரித்து இருப்பதால் நல்ல ஆரோக்கியத்தோடு நீங்கள் இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்கள் பேச்சின் மூலம் அனைத்தையும் சாதித்து விடுவீர்கள். அதேசமயம் நீங்கள் எடுத்துக் கொள்கின்ற விஷயம் எளிதாக செய்து முடிக்க சற்று பொறுமையோடு காத்திருப்பது அவசியமாகும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். புதிய பணிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் தொழிலை பற்றி கவலைப்பட வேண்டாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நிதி வளர்ச்சியில் நன்றாகவே உள்ளது. இதனால் உங்கள் சேமிப்பும் உயரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவிதமான குறைபாடும் இல்லை. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்றைய நாள் சற்று முடக்ககரமான நாளாக இருப்பதால் உங்கள் செயல்களை எளிதில் செய்ய முடியாது. எனவே புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் செயல்களை செய்ய முயற்சி செய்யுங்கள். தவறுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளதால் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

 பணி நியமித்தமாக நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே தொழில் ஸ்தானத்தில் நீங்கள் சீரும் சிறப்புமாக இருக்க பணிகள் மும்மரமாக உங்கள் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும்.நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இதை நல்ல முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களது ஆரோக்கியத்தை சீரிய முறையில் நீங்கள் பராமரிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்துக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எனவே தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு வளர்ச்சி ஏற்படுவதில் சற்று சிரமம் இருக்கும் ஆழ்ந்த தூக்கத்திற்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் மனம் குழம்பிய நிலைமையில் இருக்கும். மகிழ்ச்சிகரமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தியானத்தை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும்.

 இன்று தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடச் சூழல் சிறப்பாக இல்லை. பணியில் தவறுகள் நடந்து மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பணியில் கவனத்தை செலுத்துவது நல்லது.

 நிதி நிலைமையை பொருத்தவரை அதிகரித்து வரும் செலவினங்களால் கவலை ஏற்படும். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்ய நீங்கள் திட்டமிட வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மன அழுத்தம் காரணமாக உங்களுக்கு தொடை வலி ஏற்படலாம். தியானத்தை மேற்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எளிதாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே என்று தன்னம்பிக்கை குறைந்து இருக்கும் இதன் காரணமாக பொறுமை இல்லாமல் நீங்கள் இருப்பீர்கள். உறுதியையும், வலிமையையும் வளர்த்துக் கொள்வதின் மூலம் மட்டுமே உங்களால் வெற்றி கொள்ள முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை குறித்த நேரத்தில் பணிகளை நிறைவேற்ற முடியாது. அதில் தாமதங்கள், தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

நிதி நிலைமையை பொருத்தவரை சிறப்பாக இருக்காது. அதிர்ஷ்டம் குறைந்து காணப்படுவதால் கடின உழைப்பின் மூலம் பணத்தை நீங்கள் சம்பாதிக்க வேண்டி வரும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மிதமான ஆரோக்கியமே உள்ளது. கால், தொடைகளில் வலிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு கடுமையான பணிகளை எளிதாக முடிக்கக்கூடிய அமைப்புகள் உள்ளது. உங்கள் தனித்தன்மை வெளிவந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று விடும். எனவே நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை அர்ப்பணிப்பு தன்மையோடும், முழு முயற்சியோடு நீங்கள் பணிபுரிவீர்கள். கடினமான பணிகளை எளிதாக முடிக்க உங்களிடையே இருக்கும் திறமை பயன்படும். பல தொழில்களில் நீங்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சீராக இருக்கும் உங்கள் குடும்பத்திற்காக பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்து மகிழ்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று திடமாகவும், வலிமையோடும் இருக்கும் உங்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே இன்று தடங்கல்களை சந்தித்த பிறகு உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படக்கூடிய வகையில் சில நிகழ்வுகள் நடக்கும். இன்றைய தினம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதின் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை நீங்கள் குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடிக்க கஷ்டத்தோடு போராடி முடிப்பீர்கள். உங்கள் பணிகளை முடிக்க தாமதமானாலும் எல்லா பணிகளும் சிறப்பாக அமையும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகளுக்காக பணத்தை செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையைத் தரும் எனவே சிக்கனமாக பணத்தை செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று சுமாராகவே இருக்கும் கை மற்றும் கால்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்களது தொடர் முயற்சியால் எல்லாமே வெற்றிகரமாக நடந்து முடியும். அதற்கு ஏற்ற மன உறுதி உங்களுடைய காணப்படுவதால் உங்களுக்கு அனுகூலமான நாளாக இந்த நாள் அமையும்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். மேலும் உங்களுடைய ஆசைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை இன்று உங்களுக்கு கிடைக்கும். எனவே தொழிலில் நீங்கள் எந்தவிதமான கவலையும் பட வேண்டாம்.

நிதி நிலைமையை பொருத்தவரை இன்று அதிக அளவு பணப்புழக்கம் இருக்கும். பணத்தை குறிப்பிட்ட அளவு சேமிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்வீர்கள் இந்த சேமிப்பால் உங்களுக்கு நன்மையே கிடைக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்றைய நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தோடு நீங்கள் இருப்பீர்கள். முழு வலிமையோடும் திடத்தன்மையோடும் இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த செயல் தேடும் ஏற்படாது.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று உங்கள் பணிகளை விரைந்து செய்ய நினைத்தாலும் அவ்வளவு எளிதாக செய்து முடிக்க முடியாது. உங்கள் செயல்களில் மந்த நிலை காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தித் தரும்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை எதிர்மறை விளக்குகளை சந்திக்க நேரிடலாம். எதிர்மறையான எண்ணங்களை உங்களுள் வளர்த்துக் கொள்வதின் மூலம் உங்கள் ஆற்றல் குறைந்து விடும். மன தைரியம் குறைவாக இருப்பதால் பணியில் வளர்ச்சி இல்லாமல் மந்த நிலையை நிலவும்.

நிதி நிலைமை பொறுத்த வரை பணம் இன்று குறைந்த அளவே உங்களிடைய காணப்படு.ம் சேமிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதில் சில தடைகள் இருக்கும். எனவே சிக்கனமாக செலவு செய்வது மிகவும் நல்லது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படலாம். பிரார்த்தனை மற்றும் தியானத்தை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறந்த தினமாக இல்லை. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். சில நாட்கள் தள்ளிப் போடுவது மிகவும் நல்லது. மன உறுதியை இழந்து இருக்கும் உங்களிடம் சுய வளர்ச்சிக்காக போராட வேண்டிய நிலை ஏற்படும். ஒரே ஒரு முயற்சி செய்து நீங்கள் பணியில் வெற்றி அடையலாம் என்ற கனவு இருந்தால் கட்டாயம் அதை தவிர்த்து விடுங்கள்.

ஸ்தானத்தை பொறுத்தவரை நீங்கள்  பலமுறை முயன்றால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும் பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நிதிநிலைமையை பொறுத்தவரை இடிபார்த்த அளவுக்கு உங்களுடைய பணவரவு இருக்காது. செலவுகள் அதிகமாக காணப்படுவதால் உங்களுக்கு கவலை ஏற்படும். பணத்தை தக்கவிதத்தில் பயன்படுத்துவது நன்மையை தரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்த வரை இன்று சிறப்பாக இருக்காது. கால் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருந்தாலும் கவலைகள் ஏற்படும்.எனவே கவனமாக இருப்பது மிகவும் நல்லது. எதையும் லேசாக எடுத்துக் கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

 தொழில்தானத்தை பொறுத்தவரை பணிகளை தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே மேல் அதிகாரிகளின் அதிருப்தி உங்களுக்கு கிடைக்கும். எனவே நீங்கள் தக்க முறையில் பணியில் கவனத்தை செலுத்துவது உதிதமாக இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான நாளாக இல்லை ஏற்ற இறக்கங்கள் காணப்படும் எனவே பணத்தை சிக்கனமான முறையில் செலவு செய்ய என்ன பண்ணலாம் என்பதை பற்றி சிந்தியுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே நீங்கள் வருத்த காரமான உணவுகளை உட்கொள்ள இருப்பதை தவிர்த்து விட்டு மிதமான உணவுகளை உட்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்றைய நாள் செழிப்பான பலன்கள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாத நாள் என்பதால் உங்களுக்கு ஏற்படும் தடைகள் மூலம் மனக்குழப்பம் ஏற்படும். எனவே குழப்பமான மனநிலையை நீங்கள் இருப்பதால் உங்களுக்கு வருத்தம் வந்து சேரும்.

 தொழிலை பொறுத்தவரை நீங்கள் பணிகளை கையாளுவது எளிதாக இருக்காது. சில அசௌரியங்கள் நேரிடும்.மேலும் நேர்மறையான எண்ணத்தோடு கவனமாக பணிகளை கையாளுவது அவசியமாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான நாள் இல்லை. சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் ஏற்படும். அதற்காக செலவும் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது சிறப்பாக இருக்கும்.

---- Advertisement ----