Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இன்றைய ராசிபலன் 31 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 31 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை. யானைக்கு தும்பிக்கை இருப்பது போல மனிதனுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் மூலம் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தலாம். கர்ம வினை யின் அடிப்படையிலே மனிதனுக்கு நன்மைகள் தீமைகள் ஏற்படுகிறது. ஏழேழு ஜென்மங்களில் அவன் செய்திருக்கக் கூடிய அந்த வினையை அவன் அனுபவித்து ஆக வேண்டும்.

எனினும் அதுபோன்ற வினைகளுக்கு நிவாரணம் ஏற்படக்கூடிய வகையில் நமது ஜாதகத்தில் கூறப்பட்டிருக்கும் பரிகாரங்களை செய்து நமக்கு ஏற்படும் தீய பலன்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஜோதிட அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வெளியிடங்களுக்கு சென்று நல்ல பலன்களை அனுபவிக்க கூடிய நாளாகவும், அதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி வரக்கூடிய நாளாகவும் உள்ளது. அதிக அளவு உணர்ச்சிவசப்படுவதை நீங்கள் தவிர்த்துவிட்டு எதார்த்தமாக எதையும் செய்யுங்கள். அமைதியான மனநிலையில் இருப்பதால் உங்களுக்கு நன்மைகள் வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை தவறுகள் செய்ய நேரலாம். எனவே பணியில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. இதன் மூலம் உங்கள் பணி மேம்பாடு அடையும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். நிதியை தக்க வைத்துக்கொள்ள பயனுள்ள யுக்திகளை கையாளுவீர்கள்.

--Advertisement--

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை மற்றும் கை கால்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே தியானப் பயிற்சியின் மூலம் நீங்கள் இதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று நீங்கள் உறுதியோடு இருப்பதின் மூலம் நல்ல, நல்ல பலன்களை பெற முடியும். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உங்களிடம் மேலோங்கி இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிக்கான பாராட்டுகளை அதிகளவு பெறுவீர்கள். கூடுதல் ஆற்றலோடு செய்யப்பட்டு உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் உங்களுடைய பணத்தை சேமிக்க முயல்வீர்கள். இதனால் உங்கள் சேமிப்பு அதிகமாகும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று துடிப்பான மனநிலையில் இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறையும் இல்லை. சிறப்பான ஆரோக்கியத்தோடும் மனமகிழ்ச்சியோடும் இன்று இருப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் சிறிய பிரச்சனைகளை கையாள வேண்டி இருக்கும். எனவே கடினமான முயற்சிகள்  செய்தாலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். எனினும் நீங்கள் முயற்சியை கைவிடாமல் இருப்பது நல்லது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் இன்று வளர்ச்சி கிடைப்பதற்கான நாள் இல்லை. பணிச்சுமை அதிகரித்து காணப்படும். திட்டமிட்டு பணியாற்றுவதின் மூலம் எளிதில் பணிகளை முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கான உரிய நேரம் இது இல்லை என்பதால் சில நாட்கள் காத்து இருக்கவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று பல்வலி, அஜீரணக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, இன்று உற்சாகமான நாளாக உள்ளது. இன்று வெற்றிக்கு உகந்த நாள் என்பதால் நீங்கள் எல்லா செயல்களிலும் வெற்றி அடைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உங்கள் குடும்பத்தில் நடக்கக்கூடிய விசேஷங்கள் மூலம் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். புதிய நண்பர்களின் தொடர்பு என்று உங்களுக்கு கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை தன்னம்பிக்கையோடு பணியாற்றுங்கள். புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். மகிழ்ச்சியோடு உங்கள் பணிகளை செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வளர்ச்சி அதிகரித்து இருக்கும். சேமிப்பு கணிசமாக உயரும். புதிய முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு லாபம் ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவிதமான சுணக்கமும் இல்லை. சிறந்த முறையில் ஆரோக்கியம் இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மன உளைச்சல் அதிக அளவு ஏற்படும். பாதுகாப்பற்ற உணர்வும் பதட்டமான சூழ்நிலையும் நிலவும். உங்கள் இலக்குகளை அடைவது சற்று சிரமமான விஷயமாக இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் கூடுதல் பொறுப்புக்கள் அதிகரித்து இருக்கும். இது பதட்டத்தை  ஏற்படுத்தித் தருவதால் உங்கள் பணிகளை எளிதில் முடிக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

 நிதி நிலமையை பொறுத்தவரை பணவரவு குறைவாக இருப்பதோடு பண இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமான முறையில் கையாளுவது அவசியம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறந்த ஆரோக்கியம் கிடைப்பதற்காக அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். மேலும் உங்களுக்கு தலைவலி மற்றும் சில அசௌவுரியங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது.இசை கேட்பதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே என்று உங்களின் ஆற்றல் மேலோங்கி இருக்கும். உங்கள் இலக்குகளை நீங்கள் எளிதில் அடைய முடியும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. பணிகளை நீங்கள் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை கடினமான உழைப்புக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உங்கள் பணிகளை எளிதாக செய்வதற்கு உங்களால் முடியும். உங்கள் திறமை இன்று பளிச்சென்று  வெளிப்படும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று போதிய அளவு உங்களிடம் பணம் இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களிடம் ஆற்றல் அதிகரித்து இருப்பதால் இன்று ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்களுக்கு மிகுதியான வாய்ப்புக்கள் வந்து சேரும். இந்த வாய்ப்பை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் எளிதில் வெற்றி பெற முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கள் வந்து குவியும். பணியை குறித்த நேரத்தில் முடித்து அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை என்று திருப்திகரமாக உள்ளதால் நீங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். நிதியை பற்றி எந்த விதமான கவலையும் உங்களுக்கு தேவையில்லை.

 ஆரோக்கியமும் அதுபோலவே மிகவும் சிறப்பாக இன்று இருக்கிறது. உங்களது மன தைரியம் மேலோங்கி இருக்கும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியமும் மெச்சி கொள்ளும்படி உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இந்த நாள் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் பொறுமையோடு இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் உங்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகளை கையாளும்போது கடினமாக இருக்கும். பணி சுமை அதிகரித்து காணப்படும்.மேலும் பணிகள் தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால் தொழிலில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது.

 நிதி நிலைமை பொறுத்த வரை இருக்கும் பணத்தை முறையாக பயன்படுத்த முடியாது. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் விரைவில் கரையும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டமாக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு நரம்பு தளர்ச்சி பாதிப்புகள் வந்து சேரலாம். எனவே பிரார்த்தனையில் உங்கள் மனதை செலுத்துங்கள். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று ஸ்திரமான நாள் இல்லை. உங்கள் மனதை ஏற்படும் சலனங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க முயற்சி செய்யுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகளை திறமையாக முடிக்கலாம் என்று நினைத்தாலும் அது உங்களால் முடியாது. எனவே தொழிலில் கவனத்தை செலுத்துங்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது அது போல மேல் அதிகாரிகளின் அங்கீகாரமும் கிடைக்காது.எனவே நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 நிதி கடமையை பொறுத்தவரை பணவரவு திருப்திகரமாக இல்லை. பணவரவு வந்தாலும் அதை தக்க வழியில் உங்களால் சேமிக்க முடியாது. எனவே சேமிப்பதில் மனதை செலுத்துங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் இல்லை. உங்கள் தோள்களில் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று தகவல் பரிமாற்ற திறமையின் மூலம் உங்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். இறைமந்திரங்களை ஜெபிப்பதின் மூலமும் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் உங்கள் திறமை அதிகளவு வளரும். அதன் மூலம் உங்களுக்கு கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.

தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று பணிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களது கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் தொழிற் ஸ்தானம் என்று அமோகமாக இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்திகரமான நாள் என்று கூறலாம். ஆன்மீக காரியங்களுக்காக உங்கள் பணத்தை செலவு செய்ய நேரிடும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை துடிப்புடன் இருக்கும் உங்களுக்கு என்று ஆரோக்கிய பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது. ஆற்றல் அதிகரித்து ஆரோக்கியமும் மேம்படும்.

கும்பம்

 கும்ப ராசி அன்பர்களே இன்று எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். அதற்கான திட்டங்களை இன்று நீங்கள் தீட்டுவீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்க இன்று சிறந்த நாளாக உள்ளது. இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கு அமையும்.

தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று பணியிடத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும் உங்களுக்கான அங்கீகாரம் வந்து சேரும் இதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாகவும் பணிகளை விரைவாக முடிப்பீர்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகரித்து இருக்கும். தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு பணம் இருப்பதால் நிதியைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆரோக்கியத்தை  பொறுத்தவரை இன்று சிறப்பான ஆரோக்கியம் உங்களிடம் நிலவும். வலிமை அதிகரித்து இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்தவிதமான சுணக்கமும் உங்களுக்கு ஏற்படாது.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருப்பதால் நீங்கள் திட்டங்களை தீட்டி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளலாம். பொறுப்புக்கள் அதிகளவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். பாடல்கள் கேட்பதன் மூலம் மனதுக்கு ஆறுதல் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு போகும் எண்ணம் உண்டாகும்.இது உங்களுக்கு திருப்தி அளிக்கும். ஏதேனும் ஒரு மாற்றத்தை இன்று நீங்கள் விரும்புவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் அதை சுமையாக நீங்கள் உணர்வீர்கள். பணத்தை திட்டமிட்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்வது மிகவும் நல்லது.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை பல் வலி கண் சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். எனவே நீங்கள் ஆரோக்கியத்தில் அதிக அளவு அக்கறை காட்ட வேண்டும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top