40 வயதில் செய்யக்கூடாத தவறுகள்.

40 வயது  என்பது மெல்ல மெல்ல உங்கள் ஆரோக்கியமும் உடலும் சரிவை மேற்கொள்ளும் வயதாகும். இந்த நேரத்தில் தான் நீங்கள் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இது நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பாதி கிணற்றை தாண்டிய நிலையாகும் மீதி கிணற்றையும் தாண்ட நீங்கள் தான் உங்கள் உடல் வலிமையை பாதுகாக்க வேண்டும். 

நாற்பது வயதைக் கடந்து விட்டால் அறுபது வரை எந்த கவலையும் இன்றி வாழலாம் இதற்காக நீங்கள் ஒன்றும் கார்கில் போர் அளவுக்கு மெனக்கெட தேவையில்லை. உங்கள் அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்கள் இவற்றை பழகிக் கொண்டாலே போதுமானது. 

40 வயதுக்கு மேல் ஜிம்முக்கு சென்று பாடியை பில்ட் பண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

40-தில்செய்யவேண்டியது

முதலில் உணவுமுறை பொருத்தவரை எந்த ஒரு உணவையும் தவிர்க்க கூடாது நன்கு உண்ண வேண்டும். ஏனெனில் இருபது வயதில் ஒரு அவருக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று உங்களுக்கு மிக நன்றாக தெரியும். புரிந்துகொண்டு சத்துமிகுந்த ஆகாரங்களை தவறாமல் எடுத்துக் கொண்டு பயிற்சியை செய்ய வேண்டும். 

நமது உடல் சூழ்நிலையை நன்கு அறிந்துகொண்ட பின்னரே எடைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி எடை பயிற்சி மேற்கொள்ளும் போது தக்க ஆலோசனையோடு தான் செய்ய வேண்டும். 

---- Advertisement ----

எல்லாம் நம்மால் முடியும் என்ற ஒருவித நம்பிக்கையில் நாம் செயல்பட்டால் நிச்சயமாக தவறு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால் நமது வயதை அதற்கு காரணமாக அமைகிறது. தக்க ஆலோசனையின் பேரில் மட்டுமே நடைப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடலின் சூழ்நிலையை அனுசரித்து அதையும் நீங்கள் செய்வது மிகவும் நல்லது.

 எனவே உங்களது வயதை பற்றி நீங்கள் நன்கு தெரிந்து வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி உங்கள் உடல் நிலையையும் அறிந்து செயல்படுவது தான் மிகச் சிறப்பான பலனை கொடுக்கும். 

எந்த அளவு பயிற்சி எடுக்க முடியுமோ அவ்வளவு நேரம் செய்யமுடியுமோ அதை அனுசரித்து நீங்கள் பயிற்சி மேற்கொள்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டுதான் நீங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டும்.

---- Advertisement ----