இரவு உடையில் ரெஜினா வெளியிட்ட வைரல் புகைப்படம்

தமிழ் நடிகையாக அறியப்பட்டு தற்போது இந்தி மலையாளம் கன்னடம் என இந்தியாவில் பல வெப் சீரிஸ் களில் நடித்து பிரபலம் அடைந்து வருபவர் நடிகை ரெஜினா அவர்கள். தமிழில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிய எங்கும் நன்கு அறியப்பட்ட நடிகையாக அறிமுகமானார்.

ரெஜினா அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையில் 1988 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர் இவர் சென்னையில் உள்ள வுமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் இவருடைய தாய்மொழி தமிழாகும்.இவர் கல்லூரி படித்து முடித்த பின்பு ஸ்பிளாஷ் என்ற குழந்தைகள் தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக பணியாற்றினார் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.

2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற தமிழ் திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமானார்  நடிகை ரெஜினா அவர்கள் இந்த படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு அழகிய அசுரா என்ற திரைப்படத்தில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் தமிழில் நடித்திருந்தார். பின்பு கன்னட திரை உலகத்திற்கு சென்ற ரெஜினா அவர்கள் 2010 ஆம் ஆண்டு சூரியகாந்தி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்பு 2012 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகத்தில் கால் பதித்தார்.

தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு சிவா மனசுல சுருதி என்ற திரைப்படத்தில் சுருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு அதே ஆண்டு வெளியான ரோட்டின் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்பின்பு மீண்டும் தமிழுக்கு வந்த இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் விமல் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவருக்கு தமிழில் மிகப் பெரிய அறிமுகத்தை கொடுத்தது.

அதன் பிறகு தமிழில் நிர்ணயம் என்ற திரைப்படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் 2013 ஆம் ஆண்டு நடித்தார் அதன் பிறகு தொடர்ச்சியாக தெலுங்கில் நான்கு படங்களில் நடித்தார் இவர் 2014 இல் தெலுங்கில் நான்கு படங்களில் நடித்தார் 2015-ல் தெலுங்கில் நான்கு படங்களில் நடித்தார் அதன் பின்பு தற்போது மிகப்பெரிய இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன் பிறகு சரவணன் இருக்க பயமேன் என்ற தமிழ் திரைப்படத்தில் தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்த பின்பு தொடர்ச்சியாக தெலுங்கில் நான்கு படங்களில் நடித்தார்.

அதன் பிறகு 2018 மிஸ்டர் சந்திர மௌலி மற்றும் சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவர் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவர் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது அந்த வகையில் இவர் தற்போது இரவு உடையில் புகை படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார் அந்த புகைப்படம் தற்போது instagram பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …