இணையத்தில் லீக் ஆன பீஸ்ட் ட்ரெய்லர்..? – தீயாய் பரவும் வீடியோ..!

விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு பீஸ்ட் படம் வெளியாக உள்ளது.

பீஸ்ட் படம் தொடங்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாகி உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெட்டே, செல்வராகவன், ரெடின் கிங்க்லே போன்றோர் நடித்துள்ளனர்.ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்கில் பீஸ்ட் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு போட்டியாக ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது. தற்போது பீஸ்ட் படத்திலிருந்து தினமும் புதிய புகைப்படங்கள் வெளிவர தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : “நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. வீரராகவன் என்ற பெயரில் ஒரு Raw ஆபீஸராக விஜய் நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, பீஸ்ட் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படக்குழு நேற்று மாஸ் ஆக்ஷன் போஸ்டருடன் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

தீயாய் பரவும் வீடியோ..

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் லீக்கானது போல் வீடியோ ஒன்று தீயாக பரவி வருகிறது. இந்த வீடியோவினால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், அந்த வீடியோவை பார்க்கும் போது பாலிவுட்.. ஹாலிவுட் படங்களில் இருந்து சில காட்சிகளை வைத்து பீஸ்ட் டைட்டில் கார்டு மற்றும் தீம் மியூசிக்கை போட்டு யாரோ எடிட் செய்த வீடியோ போல தான் இருக்கிறது.

எது எப்படியோ.. இன்று மாலை 6 மணி முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பீஸ்ட் காய்ச்சல் அடிக்கப்போகின்றது என்பதை உறுதியாக சொல்லலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!

சினிமாவில் திரைப்பட நடிகைகளையும் தாண்டி சீரியல் நடிகைகளுக்கும் சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து …