பிரபல நடிகர் மாரிமுத்து மறைவிற்கு பிறகு அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கின்றது.
அதற்கு தற்பொழுது விடை கிடைத்திருக்கிறது. பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன.
இவரும் நடிகர் மாரிமுத்து போலவே பல்வேறு காட்சிகளில் நடித்ததற்காக வைரலாகி இருக்கிறார்.
குறிப்பாக இவருடைய இளந்தாரி பைய காட்சி உங்களுக்கு அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இவருடைய நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது, நான் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது.
தற்போது வரை அது உறுதிப்படுத்தப்படவில்லை. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறோம். பேச்சுவார்த்தை முடிந்தால் தான் இந்த சீரியலில் நான் நடிக்கிறேன் இல்லையா என்பது தெரியவரும் என பேசி இருக்கிறார் நடிகர் வேல ராமமூர்த்தி.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.