அட நெசமாதான்பா..! – போட்டோ போட்டு உறுதி படுத்திய ஆதி, நிக்கிகல்ராணி ஜோடி..!

நடிகர்கள் ஆதி ( Aadhi ) மற்றும் நிக்கி கல்ராணி ( Nikki Galrani ) ஆகிய இருவரும் சமீப காலமாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர்.

இதனால் இந்த ஜோடி கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை.

இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.இந்நிலையில் இப்போது ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் என்ற திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க : கடற்கரையில் வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு.. இணையத்தை அலற வைத்த நிக்கி கல்ராணி..!

இதையடுத்து ஆதி அளித்த நேர்காணலில் திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் ’விரைவில் காதல் திருமணம் செய்வேன்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகிய இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிச்சயதார்த்தத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் யாருமே கலந்துகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

அனால், நிஜமாகவே நிச்சயதார்த்தம் நடந்ததா..? அல்லது, ஏதாவது கிசுகிசுவா என ரசிகர்கள் பலரும் நினைந்தனர்.

இந்த நிலையில் புகைப்படம் வெளியிட்டு ஆதி, நிக்கிகல்ராணி ஜோடி உறுதி படுத்தியுள்ளது. இதோ, அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.