“உங்க முன்னாள் காதலனுடன்.. அதை பண்ணி இருக்கீங்களா..?..” – ஓப்பனாக பதில் கூறிய “விருமாண்டி” அபிராமி..!

நடிகை அபிராமி ( Abhirami ) குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அபிராமி நடிப்பில் தமிழில் வெளியான வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடிக்க அன்றைய கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தாலும் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

ஒரு சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் சார்லி சாப்ளின் 2 போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

---- Advertisement ----

 

 

கேள்விகளுக்கு ஆம்.. இல்லை என பதில் சொல்லும் வகையிலான கேள்விகள் தோன்றும்.. அதற்கு வீடியோவில் இருப்பவர் பதிலளிக்க வேண்டும். அந்த வீடியோவில், ப்ரேக் அப்-பிறகு உங்கள் காதலருக்கு முத்தம் கொடுத்திருக்கீங்களா..? என்று கேட்கப்பட்டது. இல்லை என்று பதிலளித்துள்ளார் அபிராமி.

 

மேலும், பள்ளியில் யாருக்காவது முத்தம் கொடுத்திருக்கீங்களா..? என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்துள்ளார்.

---- Advertisement ----