அந்த பிரபல நடிகரின் விவாகரத்துக்கு நான் தான் காரணமா..? – போட்டு உடைத்த நடிகை அபிதா..!

கடந்த 1985ஆம் ஆண்டு பிறந்த நடிகை அபிதா சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருடைய உண்மையான பெயர் ஜெனிலா என்பதாகும். கடந்த 1997ஆம் ஆண்டு எட்டுப்பட்டி ராசா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு கோல்மால் என்ற திரைப்படத்தில் ரேஷ்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு 1999ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படத்தில் அபித குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு தன்னுடைய பெயரை அபிதா என்று மாற்றிக் கொண்டார் நடிகை ஜெனிலா. அதைத்தொடர்ந்து சீறிவரும் காளை, பூவே பெண் பூவே, புதிய அலை, அரசாட்சி, உணர்ச்சிகள், சுயேட்சை எம்எல்ஏ, நம்நாடு, என் காதல் தேவதை, தீ இவன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சன் டிவியில் இவர் நடித்த திருமதி செல்வம் என்ற சீரியல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதற்கு முன்பே பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் திருமதி செல்வம் சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக இருந்தது. தற்பொழுது மாரி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

கடந்த 2001ஆம் ஆண்டு சீறிவரும் காளை என்ற திரைப்படத்தில் நடிகர் ராமராஜன் ஜோடியாக நடித்தார் நடிகை அபிதா. அந்த வருடத்தில்தான் நடிகர் ராமராஜன் தன்னுடைய மனைவியான நடிகை நளினியை விவாகரத்து செய்தார்.

அந்த நேரத்தில் நடிகர் ராமராஜன் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கு அபிதா தான் காரணம் என்று கிசுகிசுக்கள் வந்தன. இது குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து இருக்கும் நடிகை அபிதா நான் ராமராஜன் அவருடன் அதிகமாக பேசியது கூட கிடையாது.

படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன் பட காட்சிகளில் நடிப்பேன்.. மீண்டும் மேக்கப் போடும் இடத்திற்கு சென்று விடுவேன். படப்பிடிப்பு தளத்தில் படம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தவிர வேறு எதுவும் அவரிடம் நான் பேசியது கூட கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் நடிகை நளினியை நான் பார்த்ததுகூட கிடையாது. ஆனால், இவர்களுடைய விவாகரத்திற்கு நான்தான் காரணம் என்றெல்லாம் எழுதினார்கள். அப்பொழுது எனக்கு மிகப் பெரிய மன அழுத்தம் ஏற்பட்டது.

புதிதாக இப்படியான விஷயங்களை எதிர் கொண்டது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஒரு வழியாக அந்த விஷயங்களில் இருந்து வெளிவந்து தற்பொழுது இயல்பாக இருக்கிறேன். ஆனால் அந்த சமயத்தில் மிகப் பெரிய மன உளைச்சலை நான் எதிர் கொண்டேன். ராமராஜன் அவர்களின் விவாகரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்று தன்னுடைய மனக்குமுறலை போட்டு உடைத்திருக்கிறார் நடிகை அபிதா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …