“செம்மீனே..செம்மீனே.. உன்கிட்ட சொன்னேனே..” நடிகை ஸ்ரீஜா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

“செம்மீனே..செம்மீனே.. உன்கிட்ட சொன்னேனே..” நடிகை ஸ்ரீஜா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

செம்மீனே செம்மீனே உன்கிட்ட சொன்னேனே மலை ஜாதி பெண்ணுக்கு என பட்டி தொட்டி எங்கும் கிட் அடித்த பாடலில் நேர்த்தியான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகை ஸ்ரீஜா கேரளாவில் பூர்வீகமாக கொண்டவர்.

இவர்களின் குடும்பமே ஒரு கலை குடும்பமாக திகழ்ந்தது என கூறலாம். எனவே சிறு வயது முதற்கொண்டு இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பல மலையாள படங்களில் இவரை குழந்தை நட்சத்திரமாக நீங்கள் பார்த்திருக்கலாம்.

குழந்தை நட்சத்திரமாக சிறு வயதிலேயே கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் வளர்ந்த பின் ஹீரோயினியாக மாறினார்.

இதனை அடுத்து தமிழ் திரைக்குள் என்ட்ரி கொடுத்த இவர் மம்முட்டி நடித்த மௌனம் சம்மதம் என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.

மேலும் இவர் சேரன் பாண்டியன் என்ற படத்தில் ஆனந்த் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். இதனை அடுத்து எம்.ஜி.ஆர் நகரில், தையல்காரன், முதல் குரல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

---- Advertisement ----

அத்தோடு 1994 வெளி வந்த செவ்வந்தி திரைப்படத்தில் நடித்த இவர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சந்தான பாண்டியன் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தில் தான் இளையராஜாவின் இன்னிசையில் செம்மீனே செம்மீனே என்ற பாடல் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

சந்தான பாண்டியனை காதலித்து வந்த ஸ்ரீஜா பெற்றோர்கள் சம்மதத்தோடு 1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தேதி திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் அதிக அளவு தடை காட்டாமல் இருக்கும் ஸ்ரீஜா குடும்பப் பெண்ணாகவே மாறிவிட்டார். இப்போதும் செம்மீனே செம்மீனே பாடல் ஒளிபரப்பாகும் போதெல்லாம் இவரது நினைவலைகள் நம்மை சுற்றி ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

இன்றைய தலைமுறையும் விரும்பக்கூடிய பாடல்களின் வரிசையில் இந்த பாடலும் இடம் பிடித்திருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் இளையராஜாவின் அற்புத இசை திறமை தான்.

---- Advertisement ----