பாரதம் என் அம்மா, இந்தியா என் அம்மாவின் பெயர்….! – அம்மா-வை அம்மா என்று அழைப்பது தான் சரி..! – நடிகர் பரணி..!

இந்தியா-வை பாரத் என பெயர் மாற்றம் செய்யவுள்ள தகவல் குறித்து பிரபல நடிகர் பரணி தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது சார்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் நடிகர்களும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தியா என்ற பெயரில் இருந்து விட்டு போகட்டுமே இதற்காக ஏன் தற்பொழுது கோடிகளை செலவு செய்து பாரதம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று எதிர்ப்பை தெரிவிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

மேலும், இந்தியா என்ற பெயரில் போதுமானது என்று சில சினிமா நடிகர்கள் இயக்குனர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பரணி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, பாரதம் என்பது என்னுடைய அம்மா. அம்மாவினுடைய பெயர் தான் இந்தியா. இதுனால் வரை பாரத பிரதமர், பாரதத்தாய் என்றுதான் நாம் அழைத்து வந்திருக்கிறோம்.

பாரதம் என்பது ஒன்றும் புதிய சொல்லோ.. அல்லது வேற்றுமொழி சொல்லோ அல்ல.. இந்தியாவை இந்தியா என்று அழைக்கலாம் என்னுடைய அம்மாவை நான் பெயர் சொல்லி அழைக்க முடியுமா..? அம்மா-வை அம்மா என்று அழைப்பது தான் சரி.

எனவே, இந்தியாவை பாரதம் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். என்னுடைய தம்பி ஒருவன் இருக்கிறான். அவனுடைய பெயர் கண்ணன். அவனுடைய பெயர் கண்ணன் தான் என்றாலும். அவன் எனக்கு தம்பி தான்.

அவனை தம்பி என்று தான் நான் அழைப்பேன். அது போல நம்முடைய தாயான பாரதத்தின் பெயர் இந்தியா என்றாலும் பாரதம் என்று அழைப்பதில் எந்த தவறும் கிடையாது. இதில் என்ன சர்ச்சை இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.

அவர் அவர்களுக்கு தனிப்பட்ட கருத்து இருக்கிறது. என்னுடைய கருத்து இதுதான் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகர் பரணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …