நடிகர் மாரிமுத்து டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து மருத்துவமனைக்கு தன்னுடைய காரில் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த காட்சிகளில் பலரும் கவனிக்க தவறிய ஒரு விஷயம் நடிகர் மாரிமுத்து மூச்சுத் திணறல் என்ற நிலையிலும் கூட தன்னுடைய முழு பழத்தையும் உபயோகித்து தட்டு தடுமாறி தானே தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து செல்கிறார்.
இதில் பலரும் கவனிக்க தவறிய ஒரு விஷயம் இருக்கிறது. இடையில் தன்னுடைய கைபேசியை எடுத்து யாருக்கோ தகவலை அறிவிக்கவும் முயற்சி செய்கிறார். யாருக்கு போன் செய்தார் என்ற விபரம் இதுவரைக்கும் வெளியாகவில்லை.
நடிகர் மாரிமுத்து கடைசியாக பேசிய போன் உரையாடல் என்று விளம்பரப்பட நிறுவனத்திடம் அவர் பேசிய ஒரு ஆடியோ தான் வெளியாகி இருக்கிறது.
ஆனால் கடைசி நேரத்தில் மாரிமுத்து யாருக்கு போன் செய்தார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
இந்நிலையில் அவருடைய மகன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். என்னுடைய தந்தை மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர். நான் இல்லை என்றாலும் கூட இந்த குடும்பத்தை எப்படி வழிநடத்த வேண்டும். சமுதாயத்தில் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக் கூடாது. பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும். சொந்த காலில் எப்படி நிற்க வேண்டும்.
தன்னுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்துவிட்டு தான் சென்று இருக்கிறார். ஆனால் கடைசியில் தான் மரணிக்கும் தருவாயில் கூட அவரே தன்னை காப்பாற்றிக்கொள்ள காரை எடுத்து சென்று இருக்கிறார்.
மருத்துவர் சொன்னது போல ஒரு வேளை வேறு யாராவது இந்த காரை ஓட்டி வந்திருந்தால் அவர்கள் கொஞ்சம் ஓய்வெடுத்து இருப்பார்.அதன் மூலம் அவருக்கு இதய அடைப்பு ஏற்படுவது சிறிது நேரம் தள்ளிப் போயிருக்கும். அவரை காப்பாற்றி இருக்கலாம்.
View this post on Instagram
தன் உயிர் போகும் தருவாயில் கூட தன்னந்தனியாக நின்று தன்னம்பிக்கையை எங்களுக்கு காட்டி இருக்கிறார் என்னுடைய தந்தை என்று பேசி இருக்கிறார் அவருடைய மகன்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.