நடிகர் மாரிமுத்துவின் மறைவு சினிமா ரசிகர்களுக்கும் சீரியல் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு. தன்னுடைய துடுக்கத்தனமான பேச்சு.. வில்லத்தனமான நடிப்பு.. என சமீப காலமாக பெருவாரியான ரசிகர்களை பெற்றவர் நடிகர் மாரிமுத்து.
தற்போது அவர் இந்த உலகில் இல்லை என்ற விஷயத்தை நம்பவே மிகவும் கடினமாக இருக்கிறது என்கிறார்கள் அவருடன் பணியாற்றிய நடிகர்கள். பலரும் இந்த செய்தியை வதந்தியாக இருக்கக் கூடாதா என்று இப்போதும் யோசிப்பதாக பலரும் கண்ணீர் மல்க தெரிவித்து இருக்கின்றனர்.
இந்நிலையில், காலையில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவலை டப்பிங் ஸ்டுடியோவில் பணியாற்றிய நபர் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியதாவது காலை 06:30 மணிக்கு டப்பிங் ஸ்டூடியோவுக்கு மாரிமுத்து அவர்கள் வந்தார். 8 மணி வரை டப்பிங் பேசினார்.
அவர் வந்த போது வழக்கமாக எப்படி வருவாரோ..? அப்படித்தான் வந்தார்.. அப்படித்தான் பேசினார்.. அவர் உடல் நலக்குறைவில் இருக்கிறார் என்ற எந்த ஒரு அறிவகுறியும் தென்படவில்லை.
எட்டு மணி வாக்கில் ஒரு மாதிரி இருக்கிறது.. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. நான் சிறிது நேரம் வெளியே சென்று ரிலாக்ஸ் பண்ணி விட்டு வருகிறேன் என்று கூறினார்.
சரிங்க சார் வெளியே போய் நில்லுங்க கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க என்று கூறினேன்.
வெளியே சென்றார் அதன் பிறகு அவர் உள்ளே வரவில்லை. திடீரென அவரே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.
மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், பரிசோதிக்கும் போதே அவர் உயிரிழந்து விட்டார்.
கடைசியாக என்னிடம் கூறிய வார்த்தை.. என்னமோ பண்ணுது.. ஒரு மாதிரி கடினமாக இருக்கிறது.. நான் வெளிய போய்ட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரேன்.. என்று கூறினார்.
ஆனால் இப்படி நடக்கும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்று பேசி இருக்கிறார் அந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்து நபர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.