மனதை ரணமாக்கும் மாரிமுத்துவின் கடைசி போன் உரையாடல்..! – வைரலாகும் ஆடியோ..!

நடிகர் மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியில் இருந்து அவர் உடன் நடித்த சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளமுடியாமல் இருக்கின்றனர்.

திரை துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பயணித்துக் கொண்டிருந்தாலும் கூட அவர் தற்போது நடித்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் என்ற சீரியல் தான் அவருக்கு அடையாளமாக விளங்கியது.

இந்த சீரியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய தனித்துவமான நடிப்பு மற்றும் பேச்சு திறமையின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் நடிகர் மாரிமுத்து.

இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் இணையத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இவருடைய பல காட்சிகள் மீம் டெம்ப்ளேட்டாக மாறின.

அந்த அளவுக்கு கொண்டாடப்பட்ட நடிகர் மாரிமுத்து திடீரென இருதய அடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் கடைசியாக பேசிய போன் உரையாடல் உடைய ஆடியோ நமக்கு கிடைத்திருக்கிறது.

விளம்பர படம் தயாரிப்பு குறித்து விளம்பர பட இயக்குனரிடம் நடிகர் மாரிமுத்து பேசக்கூடிய ஆடியோ தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்படி ஆகிவிட்டதே இவருக்கு என்று ரசிகர்கள் பலரும் அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த ஆடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …